பீன்ஸில் இவ்வளவு சத்துக்களா! அசரவைக்கும் பீன்ஸின் ஆரோக்கிய நன்மைகள்!


Shobana Vigneshwar
28-08-2023, 11:24 IST
www.herzindagi.com

பீன்ஸ் ஊட்டச்சத்துக்கள்

    பீன்ஸில் வைட்டமின்கள் A, C, K, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.

Image Credit : freepik

ஆற்றல் தரும்

    பீன்ஸில் கீரையை விட இரு மடங்கு இரும்பு சத்து உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சோகையை தடுக்க வாரத்திற்கு 2-3 முறை பீன்ஸ் சாப்பிடலாம்.

Image Credit : freepik

சருமத்திற்கு நல்லது

    இதில் உள்ள சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் சருமம், முடி மற்றும் நகங்களுக்கு பல அதிசய நன்மைகளை தருகின்றன. இது ஆரோக்கியமான இணைப்பு திசுக்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

Image Credit : freepik

எலும்புகளுக்கு நல்லது

    பீன்ஸ் வைட்டமின் K சத்துக்களின் சிறந்த ஆதாரம் ஆகும். இது எலும்புகளில் காணப்படும் முக்கிய புரதமான ஆஸ்டியோகால்சினை செயல்படுத்துகிறது.

Image Credit : freepik

நச்சுக்களை வெளியேற்றும்

    பீன்ஸில் உள்ள வலுவான டையூரிடிக் பண்புகள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Credit : freepik

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

    பீன்ஸில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik