வெள்ளை சர்க்கரைக்கு பதில் இனி இந்த இனிப்புகளை சாப்பிடுங்க!
G Kanimozhi
02-07-2024, 12:02 IST
www.herzindagi.com
வெள்ளை சர்க்கரைக்கு சமமான சுவையான ஆரோக்கிய மாற்றுகள்
தேன்
இந்த தேனில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேனை காபி அல்லது டீயில் சேர்த்து உட்கொள்ளலாம்.
மேப்பில் சிரப்
மேப்பில் சிறப்பில் வைட்டமின்கள் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதை உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
வெல்லம்
இந்த வெல்லத்தில் வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் வெல்லத்தை எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு நன்மை பயக்கும்.
தேங்காய் சர்க்கரை
இது தேங்காயிலிருந்து எடுக்கப்படும் ஒருவித சர்க்கரை இது பார்ப்பதற்கு வெள்ளம் போல தான் இருக்கும். ஆனால் பிரவுன் கலரில் சர்க்கரை வடிவில் நமக்கு கிடைக்கும்.
பேரிச்சம்பழம்
இது இயற்கை முறையில் இனிப்பு சுவையைக் கொண்ட ஒரு பழம். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம் விழுதை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.