முளைக்கீரையில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முளைக்கீரையின் சில ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்.
Image Credit : freepik
கலோரிகள் குறைவு
100 கிராம் முளைக்கீரையில் வெறும் 23 கலோரி மட்டுமே உள்ளது. இதில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லாததால் ஆரோக்கியமானதாகவும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.
Image Credit : freepik
இரத்த சோகைக்கு நல்லது
இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது, இதன் அதிகபட்ச நன்மைகளைப் பெற கீரையை சமைத்த பின் அதில் சில துளி எலுமிச்சை சாறை சேர்க்கலாம்.
Image Credit : freepik
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
முளைக்கீரையில் வைட்டமின் C நிறைந்துள்ளது. 100 கிராம் முளைக்கீரையில் இருந்து உடலின் தினசரி வைட்டமின் C தேவையில் இருந்து 70% ஐப் பூர்த்தி செய்ய முடியும்.
Image Credit : freepik
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
முளைக்கீரை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இதன் மூலம் இருதய நோய் ஏற்படும் அபாயத்தையும் கணிசமாக குறைக்கலாம்.
Image Credit : freepik
கால்சியம் நிறைந்தது
முளைக்கீரையில் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்பு மெலிதல் நோய் மற்றும் கால்சியம் குறைபாடு போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும்.
Image Credit : freepik
குளூட்டன் இல்லாதது
முளைக்கீரையில் இருந்து பசையம் இல்லாத புரதம் நிறைந்த மாவு தயாரிக்கலாம், இது குளூட்டன் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்கிறது.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.