தினமும் ஒரு தேங்காய் சில் சாப்பிடுங்க, அதன் நன்மைகளை பெறுங்க!


Alagar Raj AP
28-06-2024, 11:00 IST
www.herzindagi.com

இதய ஆரோக்கியம்

    தேங்காய் நல்ல கொழுப்பு எனப்படும் HDL கொழுப்பை இரத்தத்தில் அதிகரித்து இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.

சரும ஆரோக்கியம்

    தேங்காயில் ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் உள்ளன, இவை தோல், முடி மற்றும் நகங்களின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி சருமத்தை பளபளக்க வைத்திருக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

    தேங்காய் சாப்பிடுவது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதற்கான பசியைக் குறைக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

செல்கள் புதுப்பிக்கப்படும்

    தேங்காய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் காரணமாக உடலில் உள்ள பழைய செல்கள் புதுப்பிக்கப்படும்.

ஆற்றல் அதிகரிக்கும்

    தேங்காயின் கொழுப்புகள் உடலால் உடனடியாக ஆற்றல் மூலமாகப் மாற்றப்படுகிறது. உடல் அதை கொழுப்பாக சேமிக்காது என்பதால் ஆற்றல் அதிகரிக்கும்.

செரிமான அமைப்பு

    தேங்காய்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதன் காரணமாக உங்கள் குடலை சீராக இயங்க செய்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

வலுவான எலும்புகள்

    எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கும் மாங்கனீசு தேங்காயில் நிறைந்துள்ளது என்பதால் இவை எலும்பை வலுப்படுத்துகிறது.