கோஜி பெர்ரி பழம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Alagar Raj AP
07-08-2024, 17:30 IST
www.herzindagi.com
சீனாவை பூர்வீகமாக கொண்ட 'கோஜி பெர்ரி' பழம் வோல்ப்பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. இதை பச்சையாகவோ, சாறாகவோ அல்லது உலர்தியோ சாப்பிடலாம். இப்படி பன்முகத்தன்மை கொண்ட கோஜி பெர்ரி பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
கண் ஆரோக்கியம்
கோஜி பெர்ரியில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் என்கிற கரோட்டினாய்டுகள் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
சரும ஆரோக்கியம்
கோஜி பெர்ரியில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சரும செல்களை பாதுகாக்கிறது. இதனால் வயதான அறிகுறிகளில் உங்கள் சருமத்தில் குறையும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோஜி பெர்ரியை சாப்பிடலாம். இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் நார்ச்சத்து காரணமாக சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நோயெதிர்ப்பு சக்தி
கோஜி பெர்ரி பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
மன ஆரோக்கியம்
இப்பழத்தை சாப்பிடுவதால் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபேறு முடியும்.
செரிமான ஆரோக்கியம்
கோஜி பெர்ரியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை நீக்குகிறது.