உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீரில் ஒரு சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் அதன் பலன்களை மேலும் அதிகரிக்கலாம். இன்றைய பதிவில் எந்த நீர் குடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Image Credit : freepik
அரிசி நீர்
அரிசி நீரை குடித்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனுடன் இதை சருமம் மற்றும் கூந்தலுக்கும் பயன்படுத்தி பளபளப்பான சருமத்தையும், ஆரோக்கியமான கூந்தலையும் பெறலாம்.
Image Credit : freepik
எலுமிச்சை நீர்
இந்த நீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறும். வைட்டமின் C நிறைந்த எலுமிச்சை தொப்பையை குறைக்கவும், கலங்கமில்லாத சருமத்தை பெறவும் உதவுகிறது.
Image Credit : freepik
சோம்பு நீர்
சோம்பு நீரை குடித்து வந்தால் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். மேலும் இது மாதவிடாய் சுழற்சி மற்றும் செரிமான செயல் முறையை சீராக்குகிறது. இது மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
Image Credit : freepik
இஞ்சி நீர்
வயிறு சார்ந்த பிரச்சனைகளை குறைக்க இஞ்சி நீர் குடிக்கலாம். இது சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவுகிறது.
Image Credit : freepik
புதினா நீர்
இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. புதினா நீர் செரிமானத்தையும் மேம்படுத்தும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.