ராகி சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!


G Kanimozhi
13-06-2024, 15:52 IST
www.herzindagi.com

    இந்த ராகியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

எலும்புகளுக்கு வலிமை

    ராகியில் 5 முதல் 30 மடங்கு அதிகமாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்கி எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதய நோய் அபாயம் குறையும்

    நம் உடலில் உள்ள ட்ரை க்ளிசரைடுகளின் செறிவை குறைக்க இந்த ராகி பெரிதும் உதவுகிறது. தினசரி உணவில் ராகி சேர்த்து சாப்பிட்டு வந்தால் எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடலில் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகரிக்கும்.

ஹீமோகுளோபின் அதிகரிக்கும்

    ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் நபர்களும் மாத்திரைக்கு பதிலாக இந்த ராகியை மருந்தாக சாப்பிடலாம்.

இளமையான தோற்றம்

    ராகி, வரகு போன்ற சிறு தானிய வகைகளில் முதிர்ச்சியை தடுக்க உதவும் பினாலிக் அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.

புற்றுநோயை தடுக்கும்

    ராகியின் மேற்புறத் தோலில் உள்ள பினாலிக் அமிலங்கள் மற்றும் பிளவனைடுகள் நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் மூலம் ஏற்படும் சேதத்தை தவிர்த்து புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    இன்றைய காலகட்டத்தில் வயது வரம்பின்றி பலரும் சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த ராகி ஒரு சிறந்த உணவு ஆகும்.