ஸ்லிம் ஆன உடல் அழகை பெற உதவும் அற்புத உணவுகள்!


Shobana Vigneshwar
10-07-2023, 14:48 IST
www.herzindagi.com

உடல் எடை குறைய

    உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்களுடைய தினசரி கலோரி உட்கொள்ளல் அளவில் கட்டுப்படுத்தங்கள். இதற்கு உதவக்கூடிய சில ஆரோக்கியமான உணவுகளை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

Image Credit : freepik

முட்டை

    உங்களுடைய சமச்சீரான உணவில் முட்டையையும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Image Credit : freepik

ஓட்ஸ்

    இதன் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகின்றன. ஓட்டுஸ் சாப்பிடுவது எடை இழப்புக்கும், இதய ஆரோக்கியத்திற்கும், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.

Image Credit : freepik

கொண்டைக்கடலை

    இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் எடை இழப்பிற்கான ஒரு சிறந்த உணவாகும். இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதுடன் அடிக்கடி ஏற்படும் பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது.

Image Credit : freepik

நட்ஸ்

    அக்ரூட், வால்நட், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குகின்றன. இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் எடை இழப்புக்கு வழி வகுக்கின்றன.

Image Credit : freepik

சியா விதைகள்

    இரண்டு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில் 10 கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ளது நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுடைய எடை இழப்புக்கு நிச்சயம் உதவும். இது போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம்.

Image Credit : freepik

அவோகேடோ

    இதில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளதால் உங்களுடைய சாலட்டில் அவகேடோவை சேர்த்துக் கொள்ளலாம். இது எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமின்றி கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Image Credit : freepik

டோஃபு

    புரதம் நிறைந்த இந்த குறைந்த கலோரி உணவை உங்களுடைய எடை இழப்பு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான மாற்று உணவாக இருக்கும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik