குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க செய்யும் 6 புரோபயாடிக் உணவுகள்
Alagar Raj AP
11-09-2024, 17:00 IST
www.herzindagi.com
குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருக்கும் போது எவ்வளவு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற முடியாது. எனவே குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ.
தயிர்
தயிர் புளிக்க வைக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் இது புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது.
ஊறுகாய்
ஊறுகாய்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.
வாழைப்பழம்
புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக வாழைப்பழம் இருக்கிறது. இதில் உள்ள மாவுச்சத்து பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர செய்கிறது.
இட்லி, தோசை
புளிக்க வைக்கப்பட்ட அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசையில் புரோபயாடிக்குகள் நிறைந்திருக்கும். இவை குடல் ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
பட்டாணி
பட்டாணியில் இயற்கையாக உள்ள புரோபயாடிக்குகள் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது.