கழிவறை அமைப்பதிலும் வாஸ்து பின்பற்றுவது அவசியம்! எது சரியான திசை தெரியுமா ?

வாஸ்துபடி வீடு கட்ட முடிவு எடுத்துவிட்டால் வீட்டின் அனைத்து அறைகளையும் கழிவறை உட்பட சரியான திசையில் அமைப்பது நல்லது. கழிவறை அமைப்பிற்கும் சில வாஸ்து குறிப்புகள் உள்ளன.

vastu for toilet

வாஸ்து சாஸ்திரம் பின்பற்றி ஒரு வீட்டை கட்டி முடித்து குடியேறும் போது நாம் எதிர்பார்த்தப்படி வாழ்க்கையில் செல்வ வளம் பெருகி ஆரோக்கியமாக இருக்க முடியும். சமையலறை, படுக்கையறை, மாடிப் படிக்கட்டு ஆகியற்றை எப்படி வாஸ்துபடி அமைக்கிறோமோ அதே முக்கியத்துவம் கழிவறை அமைப்பதற்கும் கொடுப்பது நல்லது. வாடகை வீட்டில் வாஸ்துபடி அறைகளை எதிர்பார்க்க முடியாது. இடத்திற்கு ஏற்ப வீடுகள் கட்டப்பட்டு இருந்தாலும் வாஸ்து சாஸ்திரத்தின்படி முக்கிய அறைகளை அமைத்திருப்பார்கள். வாஸ்துபடி கழிவறை எங்கு அமைக்கலாம், எங்கு அமைக்க கூடாது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

கழிவறையை எங்கு கட்டலாம் ?

  • வட மேற்கு மூலையில் கழிவறையை நிச்சயம் அமைக்கலாம். இங்கு வீட்டிற்கு உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் கழிவறை கட்டலாம்.
  • வட மேற்கு திசையில் அமைப்பதாக இருந்தால் வீட்டின் சுவரையும், சுற்றுச்சுவரை தொடாமல் வெளியே அமைக்கலாம்.
  • வீட்டையும், காம்பவுண்ட் சுவரையும் தொடாமல் வீட்டிற்கு வெளியே வட மேற்கு திசையில் வைக்கலாம்.
  • போதிய இடம் இல்லாமல் இருந்தால் மேற்கு பகுதியில் வைக்கலாம்.
  • தென் கிழக்கில் வீட்டிற்கு வெளியே கழிவறை அமைப்பதை கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். எனினும் இங்கு செப்டிக் டேங்க் வைக்கவே கூடாது.
toilet direction as per vastu

கழிவறை அமையக் கூடாத இடங்கள்

  • கன்னி மூலை என்று சொல்லக்கூடிய தென் பகுதியில் வீட்டின் உட்புறத்திலும் வெளியேவும் கழிவறை கட்டக் கூடாது.
  • வீட்டின் மையப் பகுதி என்று சொல்லப்படும் பிரம்மஸ்தானத்தில் கழிவறை அமைக்க கூடாது.
  • வடகிழக்கு என்று சொல்லக்கூடிய ஈசான்ய மூலையில் வீட்டிற்கு உட்புறமும், வெளிப்புறமும் கழிவறை இருக்க கூடாது.
  • வீட்டிற்குள் நுழையும் கதவுக்கு நேராக எக்காரணம் கொண்டும் கழிவறை வைக்க கூடாது.
  • சமையலறை மற்றும் பூஜை அறையின் அருகே கழிவறை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.

வீட்டை குறைந்த சதுர அடியில் அமைக்கிறோம். இவ்வளவு வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றி கழிப்பறை அமைக்க முடியாது என நீங்கள் நினைத்தால். சிக்கல் இல்லாமலும் கழிப்பறை அமைப்பதற்கு இடங்கள் உள்ளன. இதற்கு வீட்டின் வரைப்பட திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

  1. பிரம்மஸ்தானத்தில் இருந்து மேற்கு நோக்கி ஒரு நேர் கோடு வரையவும். இந்த கோட்டிற்கு மேல் அல்லது கீழ் பகுதியில் கழிவறை அமைக்கவும்.
  2. அடுத்ததாக பிரம்மஸ்தானத்தில் இருந்து தெற்கு நோக்கி ஒரு நேர் கோடு வரையவும்.
  3. இந்த கோட்டின் இடது மற்றும் வலது புறத்தில் கழிவறை அமைக்கலாம்.
  4. இந்த திசைகளில் கழிவறை அமைப்பது மட்டும் முக்கியமல்ல. தூய்மையாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

இது போன்ற வாஸ்து மற்றும் ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP