உலகம் முழுவதும் போற்றப்படக்கூடிய விநாயகர் சதுர்த்தி தினம் இந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வருகிறது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அதிலும் வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி தினம் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு மேல் கோலாகலமாக கொண்டாடப்படும்.
தமிழகத்தை பொறுத்த மட்டில் விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே அனைத்து மாவட்டங்களிலும் தெருக்கள் மற்றும் வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து இளைஞர்கள் இந்து அமைப்பினர் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இல்லங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பெண்கள் வழிபடுவார்கள்.
வீட்டில் வைத்து தரிசனம் செய்யப்படும் விநாயகர் சிலைகளை எந்த திசையில் வைக்க வேண்டும். வீடுகளில் விநாயகர் சிலைகளை வைக்கும் போது வாஸ்து விதிகளின்படி எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. வாழ்க்கையில் அனைத்து தடைகளையும் நீக்கி பெரும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் பெற விநாயகர் சிலைகளை வீட்டில் வைப்பதற்கு சில வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும்.
விநாயகர் சிலை வாங்குவதற்கான வாஸ்து விதி
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்ய விநாயகர் சிலையை வாங்க உள்ளீர்களா? வாஸ்து விதிப்படி விநாயகர் சிலை விநாயகரின் தும்பிக்கை இடது பக்கம் சாய்ந்து இருக்க வேண்டும் இது மகிழ்ச்சி மற்றும் வெற்றியை குறிக்கிறது வீடுகளுக்கு விநாயகர் சிலை வாங்கும் போது தும்பிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் வலது புறம் சாய்ந்திருக்கும் தும்பிக்கை கொண்ட சிலையை வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அது சூரியனின் சக்தியை குறிக்கிறது அப்படி வாங்கினால் அதற்கான சரியான மதச்ச்சடங்குகளை பின்பற்ற வேண்டும்.
வீட்டில் விநாயகர் சிலை வைப்பதில் செய்ய வேண்டியவை-செய்யக்கூடாதவை
வாஸ்து விதிகளின்படி வீட்டில் விநாயகர் சிலையை மேற்கு, வடக்கு, அல்லது வடகிழக்கு திசைகளில் மட்டும் வைக்க வேண்டும். சிவபெருமான் வடக்கு திசையில் வசிக்கிறார் எனவே விநாயகர் சிலையை இந்த திசையில் வைப்பது சரியான ஒன்று. விநாயகர் சிலையை வீட்டில் தெற்கு திசையில் வைப்பது தவிர்க்க வேண்டும். வீட்டின் நுழைவு வாயில் அல்லது வெளியே செல்லும் பாதையில் விநாயகர் சிலையை வைக்க வேண்டாம்.
விநாயகர் சிலை எந்த வடிவில் இருக்க வேண்டும்
வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட உட்கார்ந்து நிலையில் இருக்கும் கணபதி சிலை சரியாக இருக்கும். அமர்ந்திருக்கும் விநாயகர் அமைதியான வழியை காட்டுகிறார் என்று அர்த்தம். இதனால் வீட்டின் அமைதியான சூழலை விநாயகர் உருவாக்குவார். சாய்ந்திருக்கும் விநாயகர் சிலை ஆடம்பரம், ஆறுதல் மற்றும் செல்வத்தை குறிக்கிறது.
விநாயகர் சிலையின் நிறம்
வாழ்வில் மகிழ்ச்சி அமைதி மற்றும் செல்வத்தை பெற விரும்புபவர்கள் வீட்டில் வெள்ளை விநாயகர் சிலையை வைப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வெள்ளை விநாயகரின் புகைப்படங்களை ஒட்டுவதும் சரியான தேர்வாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் வைக்கக்கூடிய விநாயகர் சிலையை சிவப்பு மற்றும் ஆரஞ்சு க்கு இடையில் இருக்கும் ஒரு நிறத்தில் வாங்கவும். வாஸ்து விதிகளின்படி இந்த நிறத்தில் இருக்கும் விநாயகர் சிலை மங்களகரமாக கருதப்படுகிறது.
விநாயகர் சிலையில் கவனிக்க வேண்டியவை
நாம் அனைவரும் அறிந்தபடி விநாயகப் பெருமானின் வாகனம் சிறிய எலி பிடித்த உணவு மோதகம் அதாவது கொழுக்கட்டை. எனவே விநாயகர் சிலை வாங்கும் சிலையில் சிறிய எலி மற்றும் மோதகம் என இவை இரண்டும் சிலையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் இருப்பது நல்லதா ?
விநாயகர் சிலைகள் எவ்வளவு அழகாக இருந்தாலும் விநாயகர் சிலையின் வடிவமைப்புகள் மூலம் ஒரு சிலை வைப்பது சரியாக இருக்கும். வாஸ்து விதிகளின்படி ஒரே ஒரு விநாயகர் சிலையை வைத்து வீட்டில் வழிபடவும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிலைகள் வைப்பது வீட்டில் உள்ள ஆற்றலை எதிர்க்கும் என்று வாஸ்து விதியில் கூறப்பட்டுள்ளது.
வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க கூடாது
கணபதி மூர்த்தியான விநாயகர் சிலையை வீட்டில் படுக்கையறை, சலவை அறை, படிக்கட்டுகளுக்கு அடியில் காலியாக இருக்கும் இடத்தில் வைப்பது வீட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது என மூத்த வாஸ்து நிருபர்கள் கூறுகின்றனர். நேர்மறையான ஆற்றலை பெற விநாயகர் சிலையை மேற்குறிப்பிட்ட சரியான திசைகளில் வைத்து வழிபடவும். வாஸ்து விதிகளின்படி விநாயகர் சதுர்த்தி தினத்தை கோலாகலமாக கொண்டாடுங்கள். விநாயகரின் முழு ஆசியையும் அருளையும் பெறுங்கள்.
இதுபோன்ற ஆன்மிகம், வாஸ்து சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation