வீடு கட்டும் பொழுது பூஜை சரியான இடத்தில் அமைய வேண்டியது மிக மிக அவசியம். எவ்வளவு நேரம் பூஜை செய்கிறோம் என்பதை விட எங்கு பூஜை செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். வாஸ்துபடி வீட்டில் பூஜை அறை அமைக்க மூன்று வழிகள் இருக்கின்றன.
கோயில்களில் யாக கூடம், கும்பாபிஷேக நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஈசான்ய மூலையில் தான் அமைப்பார்கள். ஏனெனில் பூமியின் மொத்த சாய்மானமும் வட கிழக்காக அமைந்துள்ளது. எனவே அண்டவெளியில் இருந்து வரும் சக்தி சாய்மானமாக உள்ள ஈசான்யம் எனும் வடகிழக்கில் இருந்து தான் பூமியில் நுழைய முடியும். எனவே தான் ஈசான்யம் என்பது இறைவனின் ஓர் உறைவிடம் ஆகும்.
ரிக் வேதம் போற்றும் கடவுள்களில் விஷ்வகர்மன் படைப்பு கடவுளாகப் போற்றப்படுகிறார். அவரிடம் இருந்தே சகல விதமான ஆக்கத்திறன் தோன்றுவதாக நம்பப்படுகிறது. பொருட்களை உருவாக்குதல் எனும் பெருஞ்செயல் விஷ்வகர்மனின் உடையது. எனவே வடகிழக்கு திசை இறை அருள் மிளிரும் பகுதி என்பதை நாம் உணர வேண்டும். எனினும் ஈசான்யத்தை வட கிழக்கில் முழுமையாக அடைபடாமல் இருக்குமாறு அமைப்பதே சிறந்தது. மேலும் பூஜை அறையில் சூரிய கிரகம் படுமானால் மிகவும் நல்லது.
தெற்கு அல்லது மேற்கு சுவரையொட்டி கடவுள் படங்கள் அல்லது கடவுள் சிலைகளை நாம் அமைக்க வேண்டும். சுவாமி படங்கள் வைப்பதற்கு அலமாரியும் அமைக்கலாம். இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் கிழக்கு திசையில் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கியோ பூஜை அறை வைக்கலாம். இல்லையெனில் வடக்கு திசையில் உள்ள அறையில் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி சாமி படங்களை வைக்கலாம். இந்த 3 வழிகளில் பூஜை அறை அமைக்க வாஸ்து சாஸ்திரம் அனுமதிக்கிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com