வெள்ளித்திரை மூலம் சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் பலர். பல நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் கிடைக்காத பேரும் புகழும் சின்னத்திரையில் கிடைத்துள்ளது. அதே போல் சீரியல்களில் நடிப்பதன் மூலம் அவர்கள் முகம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமான முகமாக மாறி விடுகிறது. அந்த வகையில் ஆழ்வார் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்தவர் நடிகை ஸ்வேதா பண்டேகர். அந்த படத்திற்கு பிறகு பூலோகம், நான் தான் தல போன்ற படங்களில் நடித்தார். ஆனால் வெள்ளித்திரையில் கிடைக்காத வரவேற்பு அவருக்கு சந்திரலேகா சீரியல் மூலம் கிடைத்தது.
சன் டிவியில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை கடந்து ஒளிப்பரப்பான தொடர் சந்திரலேகா. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்தார் ஸ்வேதா பண்டேகர். அதே போல் நிலா சீரியலிலும் முக்கியமான ரோலில் நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு சின்னத்திரை ரசிகர்கள் ஸ்வேதாவை கொண்டாட தொடங்கினர். அவருக்கு தனியாக ஃபேன்ஸ் ஃபேட்ஜூகள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து சன் டிவியில் ஒளிப்பரப்பான முக்கியமான ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் ஸ்வேதா கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்தாண்டு ஸ்வேதாவுக்கு சன் மியூசிக் ஆங்கர் மால் மருகா உடன் திருமணம் நடைப்பெற்றது.
ஸ்வேதா - மால் மருகா திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் திரண்டு சென்று மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து இருந்தார். அதனைத்தொடர்ந்து சமீபத்தில் அவருக்கு 9வது மாத வளைகாப்பும் நடந்து முடிந்தது. இப்படி இருக்கையில் தற்போது ஸ்வேதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தைகளின் அழகான பிஞ்சு விரல்களின் புகைப்படத்தை பதிவிட்டு, ட்வின்ஸ் பேபி பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ஒன்று ஆண் குழந்தை மற்றொன்று பெண் குழந்தையாம். அதே போல் இந்த குழந்தைகள் ஒட்டி பிறந்த இட்ரட்டையர்கள் அல்ல எனவும் ஸ்வேதா குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு நன்றி என கூறி இந்த போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்வேதா மற்றும் மால் மருகாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com