மாதவிடாய் என்படு வரமா அல்லது சாபமா என்று பெண்கள் குழப்பிக்கொள்ள கூடாது. இதற்கான விடை திருவிளையாடல் புராணத்தில் உள்ள இந்திரன் பழிதீர்த்த படலத்திற்கு இருந்து கிடைக்கும். இந்திரனின் சாபத்தை யாராவது பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் சாப விமோசனம் பெற்று செளக்கியமாக வாழலாம் என்ற நிலை வருகின்ற போது சாபம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நான்கு இடங்களுக்கு பரவுகிறது. இதில் நிலம், நீர், மரம், பெண் என சாபம் பரவுகிறது. பெண்களுக்கு அந்த சாபம் மாதவிடாய் காலமாகவும், மதிப்பும் மரியாதையும் அதிகரித்து கடவுள் நிலைக்கு தன்னை உயர்த்திச் செல்லும் வரமாகவும் தரப்பட்டுள்ளது.
மாதவிடாயும் கோவிலும்
அப்படியென்றால் பெண்களுக்கும் மாதவிடாய் தொடர்பு ஆயிற்றே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இந்தியா முழுவதும் அம்பிகைக்கு பல சக்தி பீடங்கள் உள்ளன. அதில் ஒன்று அசாமின் காமாக்யா கோவில். இங்கு வருடத்தின் 3-4 நாட்கள் அதிசயத்தக்க செயல் நடைபெறும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எப்படி உதிரப்போக்கு ஏற்படுமோ அதே போல அம்பிகைக்கு ஏற்படும் என்று கோவில் மூடப்பட்டு மூன்று நாட்களுக்கு ஆண்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இன்றைக்கும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதே போல செங்கனூர் பகவதி கோயிலும்ஆண்களை அனுமதிக்காத நடைமுறை உள்ளது.
மாதவிடாய் புனிதமும் & விஞ்ஞானமும்
புராண காலத்தோடும், கடவுளோடும் தொடர்புடைய விஷயத்தை தீட்டு என்று முன்னோர்கள் சொன்னார்களா என யோசிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏன் கோயிலுக்கு கூடாது என்று சொல்வதற்கு அந்த காலத்தில் பெண்கள் பயன்படுத்திய உடைகள் மிகக் குறைவு. காலகட்டத்திற்கு ஏற்ப எடுத்த முடிவு. உதிரப்போக்கு காலத்தில் பெண்கள் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருப்பது அவசியம். அவர்களை தனிமைப்படுத்தி வைத்ததற்கான காரணமும் தொற்று பாதிப்பை கருதியே.
கோவிலுக்கு ஏன் செல்வதில்லை ?
மாதவிடாய் நாட்களில் பெண்ணின் உடலில் இருந்து அதிகளவு வெப்பம் வெளியேறும். எளிதில் தொற்று பாதிப்புக்கு ஆளாக கூடும். நம் உடலில் பிராணன், அபானன் என்ற வாயுக்கள் உள்ளன. பிராணன் மேல் நோக்கி செல்லும் வாயு, அபானன் கீழ் நோக்கி செல்லும் வாயு. மாதவிடாய் காலத்தில் அபானன் செயல்பாடு அதிகம் என்பதால் உடல் சோர்வு ஏற்படும்.
கோவில்களை கட்டும் போது சக்திவாய்ந்த தகடுகளை பூஜித்து கட்டி இருப்பார்கள். கோவிலுக்குள் இருக்கும் சக்திக்கு எதிர்மறையாக செயல்படுவது அபானன். கோவிலுக்கு சென்றால் நமக்கு அங்குள்ள நேர்மறை ஆற்றல் கிடைக்கும். மாதவிடாய் காலத்தில் அபானன் செயல்பாடு அதிக பிராணத்தை வெளியேற்றும். பெண்களுக்கு கோவிலின் சக்தி தேவைப்படாது. புராண தொடர்புபடி மாதவிடாயில் புனிதமாக கருதப்படும் பெண் கோவிலில் கிடைக்கும் சக்தியை ஏற்க அவசியம்மில்லை.
தாய்மைக்கும் மாதவிடாய் முக்கியமானது. எனவே இதன் புனிதத்தை உணர்ந்து முன்னோர்கள் கூறியதை கடைபிடிப்பது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation