herzindagi
image

தீபாவளிக்கு வீட்டில் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? ஜோதிடம் கூறுவது என்ன?

மாலையில் விளக்கு ஏற்றும் கலாச்சாரம் இன்றும் பல தமிழர்களின் வீட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் தீபம் ஏற்றுவதற்கு என்ன காரணம் என்றும் அதன் சாஸ்திரங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-10-23, 14:23 IST

தீபாவளி என்று கூறினாலே நம் வீடு முழுவதும் தீபம் ஏற்றி பிரகாசமான கொண்டாட்டங்கள் தான் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். ஆனால் குறிப்பாக தீபாவளியன்று ஏன் நம் வீடுகளில் தீபம் ஏற்றுகிறோம் என்ற காரணம் பலருக்கும் தெரியாது. நம் இந்திய மரபு வழி கலாச்சாரத்தில் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒரு பாரம்பரியம் ஆகும். அதிலும் குறிப்பாக நம் தமிழ் கலாச்சாரத்தில் நம் முன்னோர்கள் தினமும் மாலையில் வீட்டை சுத்தம் செய்து விளக்கு ஏற்றுவது உண்டு. மாலையில் விளக்கு ஏற்றும் கலாச்சாரம் இன்றும் பல தமிழர்களின் வீட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் தீபம் ஏற்றுவதற்கு என்ன காரணம் என்றும் அதன் சாஸ்திரங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தீபம் ஏற்றுவது ஏன்?


தீபாவளி பண்டிகையில் நம் வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த தீபத்தின் வடிவில் தீப லட்சுமி நம் வீட்டில் நிலை பெற்று அனைவரின் வாழ்வை பிரகாசிக்க செய்வார் என்பது ஐதீகம். புராண கதையின்படி நாராயணனால் நரகாசூரன் வதம் செய்யப்பட்ட பிறகு நரகாசுரனின் நண்பர்கள் ஆன சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். அப்போது பூமாதேவியும் திருமாலும் போர்க்களத்திற்கு போய்விட்டதால் லட்சுமி மட்டுமே வைகுண்டத்தில் தனியாக இருந்தார்கள். லட்சுமி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அசுரர்கள் அவளை கடத்தி வருவதற்காக சென்றார்கள்.

cover-1541141277

தன்னை கடத்தி செல்ல அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று ஒரு தீபத்தில் ஜோதியாக மாறி பிரகாசித்தால் என்று புராணக் கதைகளில் கூறப்படுகிறது. தீப வடிவில் இருந்த லட்சுமி உணர முடியாததால் அசுரர்கள் ஏமாற்றுத்தோடு திரும்பி சென்றுவிட்டனர். லட்சுமி தீப மகளாக திருவடிவம் கொண்ட தினம் தீபாவளி என்பதால் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இதனால்தான் தீபத்தை தீபலட்சுமி என்று இன்றும் மக்கள் வழிபடுகிறார்கள்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு இந்த பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும், வளம் பெருகும்

தீபம் ஏற்றும் எண்ணெய்:

samayam-tamil-104951533
தீபத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு விதமான பலன் உள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வரிசையில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது. அதேபோல விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

அதுவே தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமேற்றினால் உங்கள் பேச்சில் முகத்தில் அல்லது செயலில் வசீகரம் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் உங்கள் மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்சனைகளும் தீரும். ஒரு சிலர் நெய் கொண்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த நெய் கொண்டு தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் சேரும். தீபாவளி பண்டிகைக்கும் தீபத்திற்கும் அதிக தொடர்பு இருப்பதால் இது தீப ஒளி திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com