இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும் தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாள் அதாவது தை அமாவாசை தினமானது மூதாதையர்களை வழிபட உகந்த நாளாக உள்ளது. தை அமாவாசை விரதம் வழிபாடு என்றாலே வடக்கே அமைந்துள்ள காசியும், அதற்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரமும் தான் முதலில் சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வரக்கூடும். அந்தளவிற்கு தை அமாவாசை வழிபாட்டிற்கு உகந்த நாளாக உள்ளது. ஏன்? இந்தாண்டு தை அமாவாசை வழிபாடு எப்போது? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.
தை அமாவாசை எப்போது தொடங்குகிறது?
2025 ஆம் ஆண்டிற்கான தை அமாவாசையானது ஜனவரி 28 ஆம் தேதி இரவு 8.10 மணிக்குத் தொடங்கி, அடுத்த நாள் அதாவது ஜனவரி 29 இரவு 7.21 மணிக்கு அமாவாசை திதி நிறைவடைகிறது. ஜனவரி 29 ஆம் தேதி தான் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நாளாக உள்ளது.
மூதாதையர்களுக்கு வழிபாடு: ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை தினம் உள்பட மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற அனைத்து நாள்களிலும் நமக்கு பாதுகாவலாய் இருந்து மறைந்து முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த தினங்களை தை அமாவாசை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது என பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இந்த நாளில், “பித்ருலோகத்தில் இருந்து வரக்கூடிய முன்னோர்கள் 6 மாதங்கள் பூலோகத்தில் தங்கியிருப்பதாகவும், தை அமாவாசை நாளில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்வதோடு நம்மை ஆசிர்வதித்து மீண்டும் திரும்பி செல்வார்கள்” என நம்பப்படுகிறது. இதோடு செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.
இராமேஸ்வரம் செல்லக் காரணம்?
தை அமாவாசை என்றாலே நம்முடைய மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காக இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள். ராமநாதரபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாதசுவாமி கோவில் காசிக்கு இணையான புண்ணிய தலம். இங்குள்ள அக்னி தீர்த்த்தில் நீராடி தர்ப்பணம் கொக்கும் போது அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள் என நம்பப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்:
உலக பிரசித்திப் பெற்ற இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களின் வசதிக்காக வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதோடு மட்டுமின்றி தை அமாவாசை தினமான ஜனவரி 29 ஆம் தேதி ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் எனவும், 5 மணி முதல் 5.30 மணி முதல் ஸ்படிக லிங்க பூஜையும் அதன் பின்னதாக சாயரட்ச பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஷ
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation