
நவரத்தின கற்களில் வைரத்திற்கு தனி சிறப்பு உள்ளது. இந்த வைரம் சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையது. பொதுவாக வைரம் உட்பட நவரத்தின கற்களுக்கு தனித் தனியான ஆற்றல் சக்தி உண்டு. இவையெல்லாம் நமக்கு இயற்கையிலேயே கிடைக்க கூடியவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆற்றலை ஈர்க்கும் தன்மை உடையது. அதனால் நாம் இதனை கைகளில் மோதிரமாக அல்லது ஆபரணங்களாக அணிந்து கொள்கின்ற போது அதிலிருந்து கிடைக்க கூடிய அதிர்வலைகள் நம்முடைய உடலுக்கும் நம்முடைய மனதிற்கும் மாற்றத்தைத் தரும் என்பது நிதர்சனமான உண்மை. இந்தக் கட்டுரையில் வைரம் உட்பட நவரத்தின கற்கள் நமக்கு நன்மை தருமா என விரிவாகப் பார்க்கலாம்.
வைரத்தை நாம் கண்டிப்பாக அணிய வேண்டுமா என்றால் அவசியம் கிடையாது. வைரத்தை அனைவராலும் வாங்க முடியுமா என்றால் முடியாது. வைரத்தை கைகளால் தொட்டு கூட பார்க்காத மனிதர்கள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கின்றனர். குறிப்பிட்ட ராசிக்காரர்கள் தான் வைரத்தை அணியனும் அப்படியெல்லாம் கிடையாது.

முன்னொரு காலத்தில் வைரம் வாங்க செல்லும் போது வியாபாரிகள் வைரத்தைக் வீட்டிற்கே கொடுத்து அனுப்புவார்கள். வைரத்தை வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு வீட்டிற்கு நல்ல செய்தி கிடைக்கிறதா ? நல்ல விஷயங்கள் நடக்கிறதா ? என பார்த்த பிறகு அந்த வைரம் தனக்கு நன்மை அளிக்கிறது என வாங்கி கொள்வார்கள். ஒரு வேளை வைரத்தை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம், மன சஞ்சலம் ஏற்பட்டால் உடனே வைரத்தை வாங்கிய வியாபாரியிடம் அதை திருப்பிக் கொள்வார்கள். இப்படித் தான் ஒரு காலத்தில் வைர வியாபாரம் இருந்தது.
ஆனால் தற்போது இப்படி வியாபாரம் செய்ய முடியாது. இந்தக் காலத்தில் வைர வியாபாரம் செய்வோர் அதை நன்கு தூய்மைப்படுத்தி தோஷம் இல்லாத வைரமாக கொடுக்கிறார்கள். அதனால் எல்லோருமே வைரம் வாங்கலாம்.
சிலருக்கு வைரம் அணிந்த பிறகு பிரச்சினை ஆரம்பிக்கிறது என்றால் அணிய வேண்டிய அவசியம் கிடையாது. பெண்கள் வைர மூக்குத்தி விரும்பி அணிவதை பார்த்திருப்போம். திடீரென அவர்களில் சிலருக்கு தலைவலி அடிக்கடி ஏற்படும். இதை சற்று ஆராய்ந்தால் வைர மூக்குத்தி அணிந்ததில் இருந்து வலி உண்டாகி இருக்கும். சூரிய ஒளி வைரத்தின் மீது பட்டு அந்த ஒளி நம் கண்ணில் படும் போது தலைவலி ஏற்படும். வைரத்தின் ஒளித்தன்மை சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.
வைரம் என்பது ஆடம்பரத்தின் வெளிப்பாடாக பெரியவர்கள் பார்க்கின்றனர். ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் எல்லாவற்றையும் துறந்து விடுவார்கள். வைரம் உட்பட எதையும் அணிய விரும்ப மாட்டார்கள். எனவே துறவறம் நாடுவோர் வைரத்தை அணியக் கூடாது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com