எந்த பூஜையாக இருந்தாலும் அதில் நாம் கட்டாயம் வைக்க கூடிய பொருளாக வெற்றிலை பாக்கு உள்ளது. பூஜை பொருட்கள் வாங்குவதற்கு லிஸ்ட் போட்டால் அதில் மஞ்சளுக்கு அடுத்தப்படியாக நாம் எழுதுவது வெற்றிலை பாக்கு. இதை கண்டிப்பாக எல்லா பூஜைகளிலும் வைப்போம். சுப காரியங்களுக்கு மட்டுமல்ல துக்க நிகழ்வுகளுக்கும் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும். எந்த விஷயத்திற்கு தாம்பூலம் மாற்றினாலும் அதில் வெற்றிலை பாக்கு தேவை. வெற்றிலை பாக்கில் முப்பெரும் தேவிகளும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
பூஜையில் வெற்றிலையை ஒரு சாதாரண இலையாக நினைத்து வைக்கக் கூடாது. அதில் சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவிகள் இருக்கின்றனர். எங்கெல்லாம் முப்பெரும் தேவிகள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள். ஆகவே அனைத்து தெய்வங்களின் நலனை பெற வெற்றிலை பாக்கு கட்டாயம் இடம்பெறட்டும். வெற்றிலை பாக்கு நமக்கு தெய்வங்களின் அருளை பெற்றுத் தரும்.
நெய் வேத்தியத்தில் வெற்றிலை பாக்கு
எந்த பிரசாதமும் இன்றி நெய் வேத்தியம் செய்யலாம். ஆனல வெற்றிலை பாக்கு இன்றி நெய் வேத்தியம் செய்யக் கூடாது. எந்த கடவுளுக்கு பூஜை செய்தாலும் அதில் வெற்றிலை பாக்கு இடம்பெறுவதை உறுதிப்படுத்துங்கள். வெற்றிலையை காம்பு பகுதியோடு வைக்கவும். காம்பு பகுதி இல்லாமலோ அல்லது உடைந்தோ வெற்றிலை வைக்க கூடாது. காம்பு பகுதியின் நுனியை கிள்ளி விட்டும் பூஜைக்கு வைக்காதீர்கள். வெற்றிலையை முழுமையாக வைத்தே நெய் வேத்தியும் செய்யுங்கள்.
வெற்றிலையை எந்த பக்கம் வைக்கணும் ?
சாமி பக்கம் பார்த்த படி வெற்றிலை பாக்கு வைக்கவும். அடுத்ததாக எத்தனை வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும் என்ற கேள்வி எழும். இரண்டு, மூன்று அல்லது நான்கு வெற்றிலை வைக்கணுமா என குழப்பிக் கொள்ள வேண்டாம்.
- துக்க காரியங்களுக்கு ஒரு வெற்றிலை ஒரு பாக்கு போதும்.
- மங்கல நிகழ்வுகளுக்கு நான்கு அல்லது இரண்டு வெற்றிலை அவசியம்.
- பொதுவாகவே சாமிக்கு பூஜை செய்யும் போது நான்கு வெற்றிலை இரண்டு கொட்டை பாக்கு வைப்பது நல்லது. இப்போதெல்லாம் பாக்கெட் பாக்கு வைக்கிறார்கள். ஆனால் கொட்டை பாக்கு வைப்பது விசேஷமானது.
- அதிகமாக வைக்க விரும்பினால் மார்க்கெட்டில் ஒரு வெற்றிலை கவுளி அல்லது கட்டாக வாங்கி வந்து தாம்பூலத்தில் வைக்கவும்.
- பூஜைக்கு பயன்படுத்தி பிறகு வெற்றிலையை பிரசாதமாக சாப்பிடுங்கள்.
- பல ஆண்டுகளாக திருமண விருந்திற்கு பிறகு வெற்றிலை பாக்கு போடுவதன் பின்னணி இதுவே. வெற்றிலை ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். எனவே வெற்றிலை பாக்கினை முறையாக பயன்படுத்தி அதன் நன்மைளை பெறுங்கள்.
இதுபோன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation