நவராத்திரி விரதத்தின் முக்கியத்துவம்
ஒன்பது நாள் நவராத்திரி பண்டிகை துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த நாட்களில் வெவ்வேறு வகையான பூஜை செய்து துர்க்கையை பக்தர்கள் வழிபடுவர். இதன் மூலம் துர்க்கையின் ஆசிர்வாதத்தை பெற முடியும். வழிபாட்டின் ஒரு பகுதியாக விரதம் கடைபிடிப்பது முக்கியமாகும். நவராத்திரியின் இறுதிநாளில் புனித சடங்கை முடித்த பிறகு விரதம் நிறைவடையும். முதல் முறையாக விரதம் கடைபிடிப்போர் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
பழங்கள், உலர் பழங்கள்
விரதம் கடைபிடிக்க நினைக்கும் நபர்களுக்கு அதிகமாக சாப்பிடும் எண்ணம் இருக்காது. விரத காலத்தில் சாப்பிடக் கூடிய உணவுகள் என்னவென்றால் பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ் மற்றும் பால் பொருட்கள் ஆகும். ஜவ்வரிசி, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
நெய், எண்ணெய் பயன்பாடு
நவராத்திரி கொண்டாட்டத்தில் விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் நெய் பயன்படுத்துவது நல்லது. நெய் இல்லாத பட்சத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி சமையல் செய்யலாம்.
அசைவம் தவிர்க்கவும்
நவராத்திரி மிகவும் புனிதமான கொண்டாட்டம் என்பதால் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமையலுக்கு பூண்டு மற்றும் வெங்காயம் பயன்படுத்தக் கூடாது. இவை உங்களுடைய ஆன்மிக வழிபாட்டில் தடையை ஏற்படுத்தும்.
விரத நேரம்
சூரியன் மறைந்த பிறகு விரதத்தை நிறைவு செய்வது சரி. ஜீரணத்தில் பிரச்னையை ஏற்படுத்தும் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறைவான உணவு சாப்பிட்டாலும் நீங்கள் ஆற்றலோடு இருக்கலாம்.
பாலியல் விஷயத்தில் கட்டுப்பாடு
காதல் உறவு அல்லது குடும்ப உறவு எதுவாக இருந்தாலும் பாலியல் விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பாலியல் உணர்வை தூண்டும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது.
நகம் வெட்டக்கூடாது
விரத நாட்களின் போது நகம் வெட்டக்கூடாது மற்றும் சவரம் செய்யக்கூடாது. இவை இரண்டும் எதிர்மறை ஆற்றலை ஈர்க்க கூடியவை. நகம் அதிகமாக வளர்ந்தாலும் வெட்டாதீர்கள். அதே போல முகத்தில் முடி வளர்ந்தாலும் சவரம் செய்யக்கூடாது.
மந்திரம் உச்சரித்து வழிபாடு
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் மந்திரம் உச்சரித்து துர்க்கையிடம் இருந்து நேர்மறையான ஆற்றலை பெற வேண்டும். தீய சக்திகளை அழிக்க கூடிய துர்க்கை மந்திரங்களை படிக்கவும்.
சுத்த பத்தமாக இருங்கள்
ஒன்பது நாட்களும் வீட்டையும், பூஜை அறையையும் தூய்மையாக வைப்பது அவசியம். தூய்மை எப்போதுமே வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். காலையில் எழுந்தவுடன் குளித்து உடைமைகள் அடிக்கடி மாற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation