தமிழ் நாட்காட்டியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை என்ற திதி வருகிறது. நம்முடைய முன்னோர்களை நினைவு கூர்வதே அமாவாசை அன்று திதி கொடுப்பதன் நோக்கம். அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தலையாய கடமையை நிறைவேற்ற வேண்டும். அமாவாசையில் வேறு எந்த முக்கியமான விஷயம் இருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு முதலில் தர்ப்பணம் கொடுங்கள். பித்ரு வழிபாட்டை செய்த பிறகே அன்றைய நாளில் வேறு விஷயங்களை தொடரணும்.
சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக, இரண்டு மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்தவர்ளுக்கு தர்ப்பணம் கொடுக்கணுமா என கேட்டால் அதற்கு ஆம் என்பதே பதில். மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. அருட்பெருஞ்ஜோதியான அண்ணாமலையாரை வல்லாள மகாராஜா குழந்தையாக ஏற்றுக் கொண்டவர். அவர் மறைந்த பிறகு அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் வல்லாள மகாராஜாவுக்காக தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. அதே போல ராமாயணத்திலும் ராமர் தசரத சக்கரவர்த்திக்காக திதி கொடுத்த சான்று உள்ளது. எனவே மனிதர்களாகிய நாமும் எல்லா அமாவாசையிலும் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபட வேண்டும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கணும்.
ஜூலை 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.06 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 1.48 மணி வரை அமாவாசை நீடிக்கிறது.
சூரிய உதயத்திற்கு பிறகு காலை 7 மணி முதல் மதியம் 12 மணிக்கு உட்பட்டு தர்ப்பணம் கொடுங்கள்.
மதியம் 12 மணி முதல் 1.20 மணிக்குள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிடுங்கள்.
நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தால் செலவாகும் என கருதுபவர்கள் வீட்டிலயே தர்ப்பணம் கொடுக்கவும்.
அடி ஆமாவாசை நாளில் அன்னாதானம் செய்தால் தெய்வத்தின் ஆசியை பெறுவீர்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com