ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளை உண்டு வாழ்கிறது. பறவை இறந்த பிறகு எறும்புகள் அதை சாப்பிடுகிறது. நேரமும் சூழ்நிலைகளும் எப்போது வேண்டுமானாலும் மாறும். எனவே வாழ்க்கையில் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபராக இருக்கலாம் ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நேரம் உங்களை விட வலிமையானது. ஒரு மரத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் தீக்குச்சிகள் தயாரிக்கலாம் ஆனால் ஒரு குச்சி இருந்தால் போது லட்சக்கணக்கான மரங்களை எரித்துவிடலாம். கர்மா என்பதற்காக எடுத்துக்காட்டு இதுதான். கர்மா என்பது எந்த மதத்திற்கும் பொருந்தும். அறிவியல் ரீதியாகவும் நியூட்டனின் விதி போல தான் கர்மாவும். ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை இருக்கும்.
— Learn Something (@cooltechtipz) September 19, 2024
கர்மாவின் முதல் விதி
இந்த உலகில் நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு திருப்பி வரும். நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும். தீங்கு விளைவித்தால் நமக்கு தீங்கு ஏற்படும்.
கர்மாவின் இரண்டாம் விதி : பணிவு
ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை மாற்ற முடியும். அதற்கான பணிவு நம்மிடம் வேண்டும்.
கர்மாவின் மூன்றாம் விதி : பொறுப்பு
நம் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதற்கான பொறுப்பை நாமே ஏற்க வேண்டும்
கர்மாவின் நான்காம் விதி : கவனம்
எப்போதுமே இரு வேறு விஷயங்களைப் பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்க முடியாது. எனவே ஒரு விஷயத்தில் முழு கவனம் செலுத்துங்கள்.
கர்மாவின் ஐந்தாம் விதி : இங்கு & இப்போது
கடந்த காலத்தை பற்றி நினைத்தால் நிகழ்காலத்தில் வாழ முடியாது.
கர்மாவின் ஆறாம் விதி : வெகுமதி
வாழ்க்கையில் வெகுமதி கிடைக்க விடாமுயற்சியும் அதற்கான மன உறுதியும் தேவை. பொறுமையும் மிக அவசியம்.
கர்மாவின் ஏழாம் விதி : உருவாக்கம்
வாழ்க்கையில் நமக்கு எல்லாமும் அதுவாக நடக்காது; நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
கர்மாவின் எட்டாம் விதி : வளர்ச்சி
நம்மை மாற்றிக் கொள்ளும் போது நம் வாழ்க்கையும் மாறும். எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும்.
கர்மாவின் ஒன்பதாம் விதி : தொடர்பு
நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்துமே தொடர்புடையது. ஆகவே நாம் செய்யும் விஷயங்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
கர்மாவின் பத்தாம் விதி
நம்முடைய நடத்தை என்பது எண்ணங்களுடன், செயல்களுடன் தொடர்புடையது.
கர்மாவின் 11ஆம் விதி : மாற்றம்
ஒரு விஷயத்தை கற்று வாழ்க்கை பாதையை மாற்றும் வரை வரலாறு நமக்கு அதை திருப்பி சொல்லிக் கொண்டே இருக்கும்.
கர்மாவின் 12ஆம் விதி : முக்கியத்துவம்
வெகுமதி என்பது நாம் செலுத்தும் ஆற்றல் மற்றும் முயற்சிக்கு கிடைக்கும் இறுதி முடிவாகும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation