herzindagi
image

கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கா? கண்டறிவது எப்படி? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்

வழக்கமான பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகள் அவசியம் என்றாலும், சில அறிகுறிகள் உங்கள் குழந்தை கருவில் ஆரோக்கியமாகவும் ஒழுங்காகவும் வளர்ந்து வருவதை குறிக்கலாம். 
Editorial
Updated:- 2025-04-15, 21:59 IST

கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு ஒரு உற்சாகமான பயணம், இந்த பயணத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் தனது குழந்தை நன்றாக வளர்ந்து வருகிறது என்று உறுதி செய்ய விரும்புகிறார்கள். வழக்கமான பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகள் அவசியம் என்றாலும், சில அறிகுறிகள் உங்கள் குழந்தை கருவில் ஆரோக்கியமாகவும் ஒழுங்காகவும் வளர்ந்து வருவதை குறிக்கலாம். அந்த வரிசையில் கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை குறிக்கும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

கருவின் நிலையான இயக்கம்:


ஆறு மாதங்களில், கருவில் உங்கள் குழந்தை உதைப்பது, சுருள்வது மற்றும் குத்துவதை நீங்கள் உணருவீர்கள். குழந்தையின் சுறுசுறுப்பான இயக்கம் (குறிப்பாக உணவுக்குப் பிறகு அல்லது இரவில்) உங்கள் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்ற ஒரு நேர்மறையான அறிகுறியாகும். சிசுவின் அசைவுகள் திடீரென்று குறைந்துவிட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.

எடை அதிகரிப்பு:


ஒரு ஆரோக்கியமான கர்ப்ப காலம் படிப்படியாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது (பொதுவாக ஒரு சாதாரண பிஎம்ஐ உடலில் 11 - 16 கிலோ அதிகரிக்கும்). இது சரியான குழந்தை வளர்ச்சியையும் போதுமான ஊட்டச்சத்தையும் குறிக்கிறது.

இயல்பான இதயத் துடிப்பு:


கருவின் இதய துடிப்பு 110 - 160 பிபிஎம் (அல்ட்ராசவுண்ட் வழியாக கண்டறியப்பட்டது) நல்ல ஆரோக்கியத்தின் வலுவான அறிகுறியாகும். பரிசோதனைகளின் போது உங்கள் மருத்துவர் இதைக் கண்காணிப்பார்.

pregnancy-women-2

ஆரோக்கியமான பனிக்குட நீர்:


போதுமான அம்னோடிக் திரவம் என்று கூறப்படும் பனிக்குட நீர் (அல்ட்ராசவுண்ட் மூலம் சரிபார்க்கப்படுகிறது) குழந்தையைப் பாதுகாக்கிறது மற்றும் குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. மிகக் குறைந்த அல்லது அதிக நீர் இருந்தால் அப்போது மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.


கர்ப்ப காலத்தில் கடுமையான சிக்கல்கள் இருக்காது:


கடுமையான இரத்தப்போக்கு, உயர் இரத்த அழுத்தம் அல்லது கர்ப்பகால நீரிழிவு நோய் இல்லாதது பிரசவத்தில் அபாயங்களைக் குறைக்கிறது மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை குறிக்கிறது.

pregnant-woman-holding-baby-bump

தாயின் நலம்:


கர்ப்பிணிகளுக்கு உடலில் நல்ல ஆற்றல் அளவுகள், சாதாரண இரத்த அழுத்தம் மற்றும் சீரான ஊட்டச்சத்து இருந்தால், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று கூறப்படுகிறது.


மருத்துவ ஆலோசனையை எப்போது பெற வேண்டும்?


உங்கள் கருவின் அசைவுகள் குறையும் போது, கடுமையான வயிற்று பிடிப்பு அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டால், எடை அதிகரிக்காமல் இருப்பது, உங்களுக்கு அதிக காய்ச்சல் அல்லது கடுமையான சோர்வு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com