Rose Day 2024 : காதலிக்கு ஏன் ரோஜா கொடுக்கணும் ? உடனே லவ் ஓகே ஆகுமா ?

காதலர் வாரத்தின் தொடக்க நாளான ரோஸ் டே அன்று காதலிக்கு கட்டாயம் ரோஜா கொடுங்க…

rose day significances

காதலர் வாரத்தின் முதல் நாளான பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள காதல் ஜோடிகளின் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. ரோஸ் டே வரலாறு முதல் முக்கியத்துவம் வரை அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

காதல் ஜோடிகள் மிகவும் எதிர்பார்த்திருந்த காதல் வாரம் நெருங்கிவிட்டதால் சுவாசிக்கும் காற்றில் கூட காதல் பரவி இருக்கிறது. இந்த ஒரு வார காலம் உலகம் முழுவதுமே அன்பைக் குறிக்கும் சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது என்றும் சொல்லலாம். தங்களது காதல் உறவை அல்லது வாழ்க்கை துணையை உண்மையாக கண்டறிந்தவர்கள், இந்த ஒருவார காலத்தை அவர்களுடன் சிறப்பாகக் கொண்டாடி வாழ்நாள் முழுவதும் இதுபோலவே ஒருவருக்கொருவர் அர்ப்பணித்து வாழ்வோம் என வெளிப்படுத்துவர்.

காதலர் வாரம் நமக்கு அன்பின் மதிப்பையும், அது எப்படி எல்லா தடைகளையும் உடைக்கும் என்பதை காட்டுகிறது. காதலர் வாரக் கொண்டாட்டம் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் முடிவடையும்.

rose day history and ideas

ரோஸ் டே

ரோஸ் டே என்பது காதல் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதை காதல் ஜோடிகள் மட்டுமல்ல சிங்கிள்ஸூம் கமிட் ஆக முயற்சியின் தொடக்கமாகக் கொண்டாடலாம். காதலர் வாரத்தின் முதல் நாள் வண்ணமயமான ரோஜா பூக்களுடன் தொடங்குகின்றன. இது காற்றையே மயக்கும் வாசனையை கொண்டது. விதவிதமான நிறங்களில் உள்ள ரோஜா பூக்கள் அவற்றின் வண்ணங்களால் நம்மை வசீகரித்து அன்றைய நாளை பிரகாசமாக்குகின்றன.

ரோஸ் டே 2024 : தேதி மற்றும் வரலாறு

பிப்ரவரி 7 புதன்கிழமை அன்று ரோஜா தினம் மிகவும் ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும். ரோமானிய புராணங்களின்படி ரோஜாக்கள் மர்மம் மற்றும் ஆர்வத்தின் அடையாளமாக இருந்தன. இதை நாம் அன்பு மற்றும் அழகின் தெய்வமான வீனஸுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளலாம். ஆசிய மற்றும் அரேபிய கலாச்சாரங்கள் கொண்ட கிழக்கு நாகரிகங்களில் ரோஜாக்கள் அன்புடன் தொடர்புடையவை என கருதப்பட்டது.

விக்டோரியர்கள் அன்பின் அடையாளமாக ஒருவருக்கொருவர் ரோஜா மலர்களை கொடுத்து தங்கள் அன்பைக் வெளிகாட்டிக் கொண்டதாக நம்பப்படுகிறது. அப்போதிருந்து பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் டே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் அன்புக்குரியவரிடம் ரோஜாக்களை கொடுத்து கொண்டாடும் நாளாகும்.

ரோஜா தினத்தின் முக்கியத்துவம்

காதல் மற்றும் பாசத்தின் உலகளாவிய சின்னமான ரோஸ் டே அன்று காதலர் வாரம் தொடங்குகிறது. ரோஜாவை அன்பின் அடையாளமாகப் பயன்படுத்தி உணர்வுகளைக் குறிப்பாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோஸ் டே என்பது காதலர் தின கொண்டாட்டத்திற்கான தீம்-ஐ செட் செய்கிறது.

பலவிதமான உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்த வண்ணமயமான ரோஜாக்களின் பூங்கொத்தை ஒருவர் கொடுக்கலாம் அல்லது ஆழ்ந்த பாசத்தை வெளிப்படுத்த ஒரு சிவப்பு ரோஜாவைக் கொத்தாலும் போதுமானது. காதலர்களுக்கு இது ஒரு அர்த்தமுள்ள பொக்கிஷமாகும். இது நம் வாழ்வில் உள்ள தனித்துவமான உறவுகளை திக்கவும் ஒரு அழகான நினைவூட்டலாக செயல்படுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP