இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசியலைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதை நாம் அரசியலமைப்பு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு 75வது அரசியலமைப்பு தினம் ஆகும். இந்த நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதில் பங்களித்த முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவரான அம்மு சுவாமிநாதன் பற்றி தெரிந்துகொள்வோம். இவர் சமூக செயல்பாட்டாளராக அறியப்படுகிறார்.
அம்மு சுவாமிநாதன் 1894ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். எஸ்.சுவாமிநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ஆங்கிலமும் அறிந்தவர். 1914ல் அரசியலுக்குள் நுழைந்தார். அதே நேரம் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடினார். 1917ல் கமலா தேவி, அன்னி பெசன்ட், முத்துலட்சுமி ரெட்டி, மார்கரெட் சகோதரிகள், மாலதி பட்வர்தன், அம்புஜம்மாள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மெட்ராஸ் அடையாறில் இந்திய மாதர் சங்கத்தை நிறுவினார். இது பெண்களின் உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுத் தருவதற்கான அமைப்பாகும். இந்த சங்கம் நாளடைவில் இந்தியாவில் மிகப்பெரிய அமைப்பாக உருவெடுத்தது.
தேவதாசி முறை மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக பிரச்னைகளை எதிர்த்து இந்த அமைப்பு போராடியது. 1917ல் செல்ம்ஃபோர்ட் கமிஷன் மற்றும் 1918ல் சவுத்பரோ கமிட்டியிடம் பெண்களுக்கான சம உரிமை மற்றும் வாக்களிப்பு முறை பற்றி மாதர் சங்க அமைப்பு வாதாடியது.
மேலும் படிங்க விஜய் குறிப்பிட்ட அஞ்சலை அம்மாள் யார் ? “ தென் இந்தியாவின் ஜான்சி ராணி”
1934ல் அம்மு சுவாமிநாதன் காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு 1942ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றார். பெண்களின் உரிமைகளுக்காக தனது குரலை எப்போதும் பதிவு செய்தார். அதே போல வாரிசு, பரம்பரை சொத்து, திருமணம் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்களை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாயர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சாதி ரீதியான அடக்குமுறையை எதிர்த்தார். அனைவரும் சமம் எனக் கூறி தீண்டாமையை ஒழிக்க விரும்பினார்.
1946ஆம் ஆண்டி மெட்ராஸில் இருந்து அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அனைவருக்குமான அடிப்படை உரிமைகள் குறித்து முழங்கினார். மேலும் அரசியலமைப்பு சட்டமானது அனைவரின் பையிலும் அடங்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதினார்.
சுதந்திரத்திற்கு பிறகு 1952ல் மக்களவை உறுப்பினராகவும், 1954ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படார். நாடாளுமன்றம் செல்லும் நேரத்தை தவிர்த்து சினிமா மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் அம்மு சுவாமிநாதனை சென்ஸார் போர்டு துணை தலைவராக்கியது. 1960 முதல் 1965 வரை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1978ல் அம்மு சுவாமிநாதன் மறைந்தார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com