Valentine Week : காதலர் வாரம் தொடக்கம்! ரோஸ் டே முதல் கிஸ் டே வரை அன்பின் வெளிப்பாடு

காதலர் வாரம் என்பது இரு நபர்களுக்கிடையேயான அன்பையும் பிணைப்பைக் உறுதிப்படுத்தி மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்கி கொண்டாடும் வாரமாகும்.

valentines week day list

காதல் ஜோடிகள் மிகவும் எதிர்பார்த்திருந்த காதல் வாரம் வந்துவிட்டது. காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றாலும் அதற்கு முந்தைய வாரத்திலேயே காதல் ஜோடிகள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றனர். அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை காதலர் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளது. இந்த நாட்களில் ஆண் அல்லது பெண் தங்கள் அன்புக்குரியவரிடம் வெவ்வேறு விதங்களில் காதலை வெளிப்படுத்துகின்றனர். ப்ரோபோஸ் தினத்தன்று உங்கள் காதலிக்கு ப்ரோபோஸ் செய்வதில் இருந்து, சாக்லேட் தினத்தில் சாக்லேட்டு வழங்கி அவர்களை மகிழ்விப்பது, டெடி தினத்தில் டெடி பொம்மை வாங்கித் தருவது அல்லது பாடல்களை அர்ப்பணிப்பது, சத்தியம் அல்லது வாக்குறுதி தினத்தன்று இதயப்பூர்வமான அன்பை வெளிப்படுத்துவது, கட்டிப்பிடி தினத்தில் ஒற்றுமை உணர்வைக் கொண்டாடுவது, முத்த தினத்தன்று ஒரு சிறப்பு பரிசு என இறுதியாக காதலர் தினத்தில் உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் அன்பின் கொண்டாட்டமாகும்.

Valentine Week

ஒவ்வொரு நாள் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியாது எனக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் மறக்கமுடியாத அனுபவத்தைத் திட்டமிட இந்தக் சிறப்புக் கட்டுரையை நாங்கள் வழங்குகிறோம்.

காதலர் வாரம் 2024 நாட்கள்

பிப்ரவரி 7 - ரோஸ் டே

பிப்ரவரி 8 - ப்ரோபோஸ் டே

பிப்ரவரி 9 - சாக்லேட் டே

பிப்ரவரி 10 - டெடி டே

பிப்ரவரி 11 - சத்தியம் அல்லது வாக்குறுதி தினம்

பிப்ரவரி 12 - கட்டிப்பிடி தினம்

பிப்ரவரி 13 - கிஸ் டே

பிப்ரவரி 14 - காதலர் தினம்

காதலைக் கொண்டாட ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தீம் உள்ளது. காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் எதிர்பாராதவிதமாகப் பரிசுகள், பூக்கள், சாக்லேட்டுகள் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் அபிமானத்தையும் வெளிப்படுத்தலாம். உங்கள் உறவை வலுப்படுத்தவும், புதிய நினைவுகளை உருவாக்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ரோஸ் டே என்பது காதலர் வாரத்தின் முதல் நாளாகும். இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரியவரியர் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற அன்பை வெளிப்படுத்த பூக்களை வழங்குகிறார்கள்.

ரோஸ் டே-விற்கு அடுத்த நாள் அதாவது காதலர் வாரத்தின் இரண்டாவது நாள் ப்ரோபோஸ் டே என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் காதலன் தன் காதலியின் முன் தன் காதலை வெளிப்படுத்துகிறான்.

சாக்லேட் தினம் என்பது காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாகும். இந்த நாளில், காதலிக்கு பிடித்தமான சாக்லேட்டை காதலன் கொடுப்பது வழக்கம். இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர்சாக்லேட் தொகுப்பு மற்றும் சாக்லேட் கூடைகளை பரிசாக வழங்குகிறார்கள்.

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி தினமாகும். பெரும்பாலான பெண்கள் டெடி எனும் கரடிகளை விரும்புகிறார்கள். இந்தச் சிறப்பு தினத்தைக் கொண்டாட காதலன் தனது காதலிக்கு பிடித்தமான நிற டெடியை பரிசாக வழங்குகிறார்கள்.

ப்ராமிஸ் டே என்பது காதலர் வாரத்தின் ஐந்தாவது நாளாகும். இந்த நாளில் காதலன் தனது வாழ்நாளில் எந்த சிரமம் வந்தாலும் உன்னுடன் இருப்பேன் என்றும் காதலியின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகவும் அன்புடன் உறுதியளிக்கிறார்கள்.

காதலர் வாரத்தின் ஆறாவது நாள் கட்டிப்பிடி நாளாளும். எல்லா வகையான பரிசுகளுக்கும் அப்பால் கட்டிப்பிடிப்பது காதலனையும் காதலியையும் உண்மையான அன்பை உணர வைக்கிறது. இந்த நாளில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வழக்கம் உள்ளது.

முத்த தினம் என்பது காதலர் வாரத்தின் ஏழாவது நாளாகும். இந்த நாளில் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு காதலின் உச்சத்தை உணர்த்துகின்றனர். காதலர்கள் மட்டுமல்ல தம்பதிகளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் அபிமானத்தையும் வெளிப்படுத்த இந்தக் குறிப்பிட்ட நாளில் முத்தங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP