herzindagi
image

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற தமிழக அரசின் பயிற்சி வகுப்புகள்

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, குரூப் 2ஏ உள்ள பதவிகளுக்கு சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
Editorial
Updated:- 2025-07-17, 07:30 IST

குரூப் 2, குரூப் 2ஏ எனும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளில் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 15ஆம் தேதி தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் முதன்மை தேர்வு குரூப் 2ஏ பணிகளின் தேர்வுத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில் முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் ( 2024 மற்றும் 2025) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளின் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 645 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதன்படி ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை இணையத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 12ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு மிகக் கடினம் என பெரும்பாலான தேர்வர்கள் கூறிய நிலையில் தற்போது குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கு பயிற்சி

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பானது மாநில
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை மூன்றாம் வாரம் முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திங்கள் - வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் நடத்தப்படவுள்ளது. குரூப் 2, குரூப் 2 முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு இப்பயிற்சி மிகுந்த பயனளிக்கும். சென்னை கிண்டியில் திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் நேரில் அணுகலாம்.

tnspc group 2

குரூப் 2 தேர்வு அட்டவணை

தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரிய இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. முதல் நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். முதன்மை தேர்வு நாள் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அறிவிக்கப்படும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com