ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பணியில் புதிதாக உருவாக்கப்படும் இடங்களையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 24ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
குரூப் 4 தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் அனைத்து தேர்வர்களும் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 24ஆம் தேதி ஆகும். விண்ணப்பம் திருத்த சாளர காலம் மே 29 முதல் 31ஆம் தேதி வரை ஆகும். தேர்வு நடைபெறும் தேதி ஜூலை 12ஆம் தேதி.
குரூப் 4 தேர்வு அறிவிப்பு
அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - குரூப் 4 பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள், 2022ஆம் ஆண்டு அறிவிக்கையில் மூன்று நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ஆம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஐந்து நிதியாண்டுகளுக்கு 17 ஆயிரத்து 799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3ஆயிரத்து 550 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
2025 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 4 மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள்), ஒரு நிதியாண்டிற்கு 3 ஆயிரத்து 678 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation