2025 ஆண்டுக்கான குரூப் 1,2,4 தேர்வுகள் அட்டவணை, தேர்வு நாட்கள், காலி பணியிடங்களின் விவரம்

அரசு வேலைக்காக தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள் ? 2025ஆம் ஆண்டுக்கான தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 2, 4 தேர்வு தேதிகளை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தயாராகுங்கள். குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை, விண்ணப்பம், தேர்வு தேதி இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது.
image

அரசு வேலை கிடைத்தால் மன்னர் போல் வாழலாம் என்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அரசுப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் நபர்கள் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு அரசு வேலைகளுக்கு ஆட்கள் பணியமர்த்தப்படுவார்கள். கடந்த மாதம் 2024ல் நடந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்வான நபர்களுக்கு அரசுப்பணிக்கான சான்றிதமும் வழங்கப்பட்டன. 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தெரிந்து கொள்ளும் போது அதற்கு முன்கூட்டியே தயாராகலாம். நீங்கள் இதுவரை குரூப் தேர்வுகள் பற்றி அறியாத நபராக இருந்தாலும் குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை, விண்ணப்பம், கல்வித் தகுதி, காலிப் பணியிடங்களின் விவரங்களை இந்த பதிவில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

tnpsc group exam dates

தேர்வு அறிவிப்பு முதல்நிலைத் தேர்வு நாள்
குரூப் 1 ஏப்ரல் 1, 2025 ஜூன் 15, 2025
குரூப் 2 ஜூலை 15, 2025 செப்டம்பர் 28, 2025
குரூப் 4 ஏப்ரல் 25, 2025 ஜூலை 13, 2025

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை ( ஐடிஐ, டிப்ளமோ )

ஜூன் 13, 2025 ஆகஸ்ட் 28, 2025
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் ( Interview ) மே 7, 2025 ஜூலை 21, 2025
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் ( Non Interview ) மே 21, 2025 ஆகஸ்ட் 04, 2025

குரூப் தேர்வுகள் 2025 அறிவிப்பு

குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து வெளியாக தொடங்கும். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு அட்டவணைப்படி வெளியாகும். குரூப் தேர்வு அறிவிப்பில் எந்தெந்த பதவியில் காலி பணியிடங்கள், விண்ணப்ப முறை, தேர்வு நாள் உள்ளிட்ட விவரம் இடம்பெறும்.

குரூப் தேர்வு விண்ணப்பம்

குரூப் தேர்வுக்கு நீங்கள் இதுவரை விண்ணப்பிக்காத நபராக இருந்தால் TNPSC.org என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று ஒரு முறை பதிவை பூர்த்தி செய்யவும். உங்களுடைய பெயர், முகவரி, கல்வி தகுதி, உடற்தகுதி உள்ளிட்ட விவரங்களை அதில் பதிவிடவும். இதற்கு 150 ரூபாய் பதிவுக் கட்டணமாகும். தேர்வு அறிவிப்பு வருகையில் அதற்கு தனி கட்டணம் செலுத்த நேரிடும்.

அரசுப் பணியில் காலியிடங்கள்

தேர்வு

காலி பணியிடங்கள்

குரூப் 1 90
குரூப் 2, 2A 2327
குரூப் 3 1365
குரூப் 4

6244

தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டில் சுமார் 40 ஆயிரம் அரசுப் பணிகள் நிரப்பபடும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிங்கடிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்வு முடிவுகள் விவரம்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP