குழந்தைகள் என்றாலே பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மழலை மாறாத பேச்சுகள், அவர்கள் செய்யக்கூடிய சேட்டைகள் அனைத்தும் எப்போதும் பெற்றோர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். பிறந்தது முதல் அம்மா- அப்பாக்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக உடல் நலம் முதல் சமூகத்தில் சிறப்புடன் வாழ்வது அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பு முறைகள்:
மேலும் படிங்க: பணியிடத்தில் பெண்களுக்கு அதிகரிக்கும் மன அழுத்தம்; தவிர்ப்பது எப்படி?
- ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் ரோல் மாடலாக இருக்க வேண்டும். குழந்தைகள் முன்னதாக நீங்கள் என்ன செயல்கள் செய்கிறீர்களோ? அதைத் தான் அவர்கள் பிரதிபடுத்துவார்கள். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையை அவர்களுக்கு வழங்கவும்
- எந்த சூழலிலும் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் முன்னதாக கவலைகளைக் காட்டிக்கொள்ளக்கூடாது. இது குழந்தையின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இக்கட்டான சூழலிலும் மகிழ்ச்சியான நபராக இருப்பது குழந்தைகளுக்கு பாசிடிவ் எனர்ஜியையும் கொடுக்கும்.
- இன்றைக்கு மொபைலில் அதிக நேரம் செலவிடும் நாம் அதற்கேற்ப குழந்தைகளிடம் நேரத்தை செலவிட மறந்துவிடுகிறாம். இது தவறான செயல். எனவே பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளிடம் பேச வேண்டும். அவர்களிடம் உங்களிடம் பேச வந்தாலும் முழு கவனம் செலுத்தவும். ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து குழந்தைகள் உங்களிடம் விளக்கம் கேட்டால் அவர்களுக்கான பதிலைத் தர முயற்சி செய்யுங்கள்.
- தினமும் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட வேண்டும். முடிந்தவரை வாரத்திற்கு ஒருமுறையாவது மேற்கொள்ளும் போது, குடும்ப உறவுகள் வலுப்பெறும்.
- குழந்தைகளின் திறமைகளை அறிந்து அதற்கானப் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு முயற்சி செய்யவும். வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவது உங்கள் குழந்தையின் டிவி நேரத்தையும் குறைக்கும். புத்தகங்களை ஒன்றாகப் படிப்பதன் மூலம் அவர்களின் அறிவாற்றல் வளர்க்க உதவியாக இருக்கும்.
- குழந்தைகள் என்றாலே சேட்டைகளும், தவறுகளையும் செய்வார்கள். இவ்வாறு ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் கத்துவதற்குப் பதிலாக உங்கள் குழந்தைகளிடம் அமைதியாக பேசவும். ஏன் என கேட்பதோடு, என்ன தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கற்றுக்கொடுக்கவும்.
- உங்கள் பணியிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் குழந்தையுடன் பயணம் அல்லது வெளியூர் பயணத்தைத் திட்டமிட வேண்டும். அவர் இயற்கையை ஆராய்வதற்கும் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.

- குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம்கள் பிடித்தமான ஒன்று. அடிக்கடி சாப்பிடும் போது உடல் நல பாதிப்பும் என்பதால், குறிப்பிட்ட இடைவெளியில் இனிப்புகள், சாக்லேட்கள் அல்லது ஐஸ்கிரீம்களை சாப்பிட அனுமதிக்கவும்.
- ஒரு குழந்தைக்கு சமச்சீர் ஊட்டச்சத்து உணவு மிகவும் முக்கியமானது. நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது என்பதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சாப்பிட பழக்கப்படுத்துங்கள்
மேலும் படிக்க: பெண்களே.. வேலையினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்!
குழந்தைகள் ஆரோக்கியம் இருப்பதற்கு அதிக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.மேலும் காலை உணவுகளை கட்டாயம் சாப்பிட வலியுறுத்த வேண்டும். உங்கள் குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தூக்கம் முக்கியம் என்பதால், உறக்க நேர வழக்கம் உங்கள் குழந்தைக்கு மிகவும் முக்கியமானது. நல்ல 8-10 மணிநேர தூக்கம் உங்கள் பிள்ளை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation