30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மாதந்தோறும் ரூ 5,000 சேமிப்பதற்கான வழிகள்

மாதத்தின் முதல் வாரத்திலயே நாம் வாங்கும் சம்பளத்தில் பெரும்பாலான தொகை செலவாகிவிடுவதால் பணம் சேமிப்பது மிகவும் சிரமமாகிவிடுகிறது. இந்தியாவில் பலரின் சராசரி ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். 30 ஆயிரம் சம்பளத்தில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் சேமிப்பது என்பதை பார்ப்போம்.
image

மாதம் 1ஆம் தேதி அல்லது 5ஆம் தேதி அல்லது முதல் வாரத்திற்குள் நமது வங்கிக் கணக்கில் பணியாற்றும் அலுவலகம் சம்பளத் தொகையை செலுத்துகிறது. 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வாடகை, EMI, செல்போன் ரிசார்ஜ், அத்தியாவசிய பொருட்கள், இதர செலவுகள் என மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள்ளேயே வாங்கிய சம்பளத்தில் 85 விழுக்காடு பணம் காலியாகிவிடுகிறது. 30 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து சேமிக்க முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். சில மாற்றங்களை செய்தால் ஒவ்வொரு மாதமும் நிச்சயம் 5 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும்.

ரூ 30,000 சம்பளத்தில் 5,000 சேமிப்பு

பட்ஜெட் ( 50-30-20 விதி )

ஒவ்வொரு மாதமும் 50-30-20 விதி பின்பற்றி பட்ஜெட் திட்டமிட்டால் 5 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். அதென்னா 50-30-20 விதி ?

50 விழுக்காடு பணம் - வீட்டு வாடகை, மளிகை பொருட்கள், போக்குவரத்து செலவு, அடிப்படை தேவை

30 விழுக்காடு பணம் - குடும்பத்துடன் ஹோட்டல் செல்வது, ஷாப்பிங், பொழுதுபோக்கு செலவுகள்

20 விழுக்காடு பணம் - சேமிப்பு கணக்கு, பிக்ஸட் டெபாஸிட், அவரச நிதி

இந்த விதியை தவறாமல் பின்பற்றினால் 6 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவுகளுக்கு குறைவான தொகை செலவு செய்தால் அதை வீட்டிற்கும், சேமிப்புக்கும் பிரித்து பயன்படுத்தவும்.

சேமிப்பு கணக்கு தொடக்கம்

மாதந்தோறும் சேமிக்கும் பணத்தை வீட்டிற்குள் பூட்டி வைக்காமல் அதிக வட்டி கொடுக்கும் வங்கியில் பணத்தை போட்டு வைக்கவும். சில வங்கிகளில் ஆண்டுக்கு 6 விழுக்காடு மேல் வட்டி கிடைக்கிறது. மாதந்தோறும் தவறாமல் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவும்.

saving 5000 in salary

செலவினங்களை குறைத்தல்

வீட்டில் சமையல்

வாரத்திற்கு இரண்டு முறை என மாதத்திற்கு எட்டு முறை ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதால் 4 ஆயிரம் முதல் 5 ரூபாய் வரை செலவாகிறது. சில சமயங்களில் அதற்கும் மேல் செலவாகும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளியே சாப்பிடும் பழக்கத்திற்கு மாறினால் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம்.

வைஃபை சேவை

இணையதள வசதிக்காக வைஃபை சேவை பெற மாதந்தோறும் 500 ரூபாய் செலவு செய்கிறோம். செல்போன் ரீசார்ஜில் அன்லிமிட்டெட் பிளானை வீட்டில் இரண்டு பேர் ரீசார்ஜ் செய்தால் 300 ரூபாய் மிச்சமாகும்.

போக்குவரத்து செலவு

அலுவலக பணிக்கு செல்ல இருசக்கர வாகன போக்குவரத்து பயன்படுத்துகிறோம். பெட்ரோல் விற்கும் விலைக்கு குறைந்தது மாதம் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்வோம். எல்லா நாட்களும் இருசக்கர வாகனம் பயன்படுத்தாமல் எலக்ட்ரிக் இரயில் அல்லது பேருந்து போக்குவரத்து சேவை பயன்படுத்தினால் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 500 ரூபாய் மிச்சம் பிடிக்கலாம்.

திட்டமிட்ட செலவு

வெளியே செல்லும் போது பார்க்கும் பொருட்களை வாங்க ஆசைப்படுவோம். அதை வாங்க கூடாது என அறுவுறுத்தவில்லை. உங்கள் பட்ஜெட்டிற்குள் அந்த பொருள் உள்ளதா என்று யோசிக்கவும்.

பிக்ஸட் டெபாஸிட்

வங்கியில் பிக்ஸ்ட் டெபாஸிட் கணக்கு தொடங்கி வீட்டு சமையல், வைஃபை சேவை, போக்குவரத்து செலவு, திட்டமிட்ட செலவில் சேமித்த பணத்தை பிக்ஸ்ட் டெபாஸிட் கணக்கு தொடங்கி சேமித்து வரும். சில வங்கிகளால் நமக்கு பிக்ஸ்ட் டெபாஸிட் கணக்கிற்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

இதர சேமிப்பு

அலுவலக பணி முடிந்து வீடு திரும்பி 3 மணி நேரம் ஓய்வு கிடைக்கும் என்றால் அந்த நேரத்தை முறையாக பயன்படுத்துங்கள். ஆன்லைனில் கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். கைவினை பொருட்களில் உருவாக்குவதில் வல்லவராக இருந்தால் 2 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

மேலும் படிங்ககுடும்பத்தில் மாதாந்திர செலவுகளை குறைக்க தடுமாற்றமா ? இந்த வழிகள் உதவும்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP