கருணையின் மறு உருவமாக விளங்கிய அன்னைத் தெரசா 20ஆம் நூற்றாண்டில் மிகவும் மனிதாபமிக்க நபராக கருதப்பட்டார். வடக்கு மாசிடோனியா நாட்டின் ஸ்கோப்ஜி நகரில் பிறந்திருந்தாலும் கொல்கத்தா மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஏழை மக்களுக்காகவும், கடுமையான நோய் தாக்குதால் பாதிகப்பட்டவர்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்தார். அன்னை தெரசாவின் செயல்கள் ஒவ்வொன்றும் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 1950ல் அன்னை தெரசா எம்ஓசி என்ற மத சபையை தொடங்கினார். இதில் வரும் நிதி அனைத்தும் ஏழைகள் மற்றும் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க செலவழிக்கப்பட்டது. அன்னை தெரசாவின் தலைமையின் கீழ் ஆயிரணக்கான உறுப்பினர்கள் இந்த சபையில் செயல்பட்டனர். எம்ஓசி அமைப்பு 130க்கும் அதிகமான நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆதரவற்றவர்களுக்கும், உயிரிழக்கும் நிலையில் இருந்தவர்களுக்கும் வீடுகளை கட்டிக் கொடுத்தது. அதே போல வறுமை காரணமாக கல்வி பயில முடியாமல் சிரமப்பட்ட ஏழை மாணவர்களுக்கான பள்ளிகளையும் இந்த அமைப்பு நிறுவியது.
மனிதாபமிக்க பணிக்காக அன்னை தெரசாவுக்கு அடுக்கடுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 1979ல் உலகிலேயே உயரிய விருதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. 1997ல் அவர் மறைந்த நிலையில் 2016ல் புனித ஆத்மாவாக அறிவிக்கப்பட்டார். காலங்கள் கடந்தாலும் அன்னை தெரசாவின் மனிதாபிமானம் போற்றப்படுகிறது. ஆனால் நாம் ஒன்றை கவனிக்க தவறிவிடுகிறோம். அவரது தலைமை பண்பினால் மட்டுமே உலகம் முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு உதவ முடிந்தது.
அன்னை தெரசா தனது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்ததே அவரது தலைமை பண்பிற்கான முக்கிய காரணம் ஆகும். தன்னுடைய தேவைக்கு முன்பாக பிறருடைய தேவைக்கு முக்கியத்துவம் தந்ததே தலைமை பண்பிற்கான அழகாகும். இதற்கு ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம். ஹெச்.ஐ.வி, எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு பலரும் அஞ்சி ஓடிய நிலையில் அன்னை தெரசா அவர்களுக்கென காப்பகம் ஒன்றைத் திறந்தார். தன்னுடைய பாதுகாப்பு, சபை உறுப்பினர்களின் பாதுகாப்பை விட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வு அளிப்பதில் கவனம் செலுத்தினார்.
கடவுளின் கையில் நான் சிறிய பென்சிலாக செயல்பட்டு உலகிற்கு காதல் கடிதம் அனுப்புவதாக அன்னை தெரசா தன்னை குறிப்பிட்டார்.
தனது வாழ்க்கை முழுவதும் அன்னை தெரசா பணிவான நபராக விளங்கினார். எப்போதுமே பிறர் மீது பணிவு காட்டும்படி எடுத்துரைத்தார். ஒருவரின் சமூக அந்தஸ்து மற்றும் பின்னணியை பொருட்படுத்தாமல் கொல்கத்தாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்த அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டினார். இதுவே அவரது கருணை உள்ளத்தின் சான்றாகும்.
நம்முடைய செயல் மிகப்பெரிய கடலில் ஒரு சிறு துளி என நினைக்கிறோம். ஆனால் கடலில் ஒரு துளி குறைந்தாலும் அதை தவறவிட்டதாக கருத வேண்டும் என்கிறார் அன்னை தெரசா...
அன்னை தெரசா எப்போதுமே பிறருக்கு சேவையாற்றினார். பிறருக்கு சேவையாற்றுவதன் மூலம் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பினார். அவர் தனது வாழ்க்கையில் செய்த தியாகங்களும், அர்ப்பணிப்பும் பிறருக்கு சேவையாற்றுவதன் சக்தியை உலகிற்கு உணர்த்தியது.
நாம் எல்லோராலும் பெரிய காரியங்களை செய்ய முடியாது, எனினும் அன்புடன் சிறிய சிறிய விஷயங்களை செய்ய முடியும் - அன்னை தெரசா
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com