Ramzan Wishes : வாழ்வில் வசந்தம் வளர்பிறையாய் வளர இனிய ஈகைத் திருநாள், ரம்ஜான் வாழ்த்துகள்

மார்ச் 31ஆம் தேதி இஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடவுள்ள ஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் நாளில் அனுப்ப வேண்டிய வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்திகள் இங்கே. ரமலான் மாதத்தின் நிறைவில் பிறை தோன்றியதும் ஈத்-உல்-பிதர் கொண்டாடப்படுகிறது.
image

இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கியமானது. புனித ரமலான் மாதத்தில் சூரிய உதம் முதல் அஸ்தமனம் வரை பட்டினி இருந்து நோன்பு நோற்கின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமலானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இந்த வருடம் ரமஜான் மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு, உறவுகளுக்கு அனுப்ப வேண்டிய ரமலான் / ரம்ஜான் வாழ்த்து இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ளது.

ramadan 2025 messages greetings

ரம்ஜான் வாழ்த்து 2025

  • அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் இஸ்லாமிய உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த ரமலான் வாழ்த்துகள்
  • பசித்திருக்கப் பழகு பசித்தவர்களுக்கு உதவு என்ற வார்த்தைக்கு வடிவம் தந்த நாள் இந்நாள் நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகள்
  • பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து இறைவனை வணங்கி மனித நேயத்தின் அவசியத்தை உணர்த்தி ஈகைத் திருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள்
  • வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்... வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்... இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
  • பிறை தெரியட்டும் பிணிகள் நீங்கட்டும்... இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்
  • எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவரும் இனிய ரமலான் வாழ்த்துகள்
  • உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகள்… நன்னெறியும் நல் எண்ணமும் நாளெல்லாம் மலரட்டும்
  • பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உங்கள் வாழ்வு இனி என்றும் வளர் பிறையாக ஒளிர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
  • உங்களுடைய எல்லா தேவைகளையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக... இனிய ரமலான் வாழ்த்துகள்
  • நோன்பிருந்து இறைவனை வேண்டி... இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி... உறவுகளுடனும்… நட்புகளுடனும்… அன்பை பரிமாறி… இறைவனை தொழும் இனிய சொந்தகளுக்கு இனிய ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள்
  • வாழ்வில் வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும் துன்பங்கள் தேய்பிறையாய் தேயட்டும் இன்பங்கள் நிறைந்த இனிய ரம்ஜான் வாழ்த்துகள்
  • இறைவனை வேண்டுங்கள் இல்லை என்று சொல்லாமல் கேட்டதை வாரி வழங்குவார் பிறை தெரியும் இந்த நல்ல நாளில் மகிழ்ச்சி நிறைந்த ரம்ஜான் வாழ்த்துகள்.
  • மழையும் வெயிலும் மண்ணுக்கு வேண்டும்… ஈகையும் நட்பும் மனிதனுக்கு வேண்டும்… ரம்ஜான் வாழ்த்துகள்
  • இருகரம் ஏந்தி தொழுது கேட்பதெல்லாம் இயல்பு நிலையின்றி வேறொன்றுமில்லை இறைவா அனைவரும் நலம் காண இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
  • பிறைநிலா வானில் புன்னகை பூத்து சிரிக்க விடிவெள்ளிக்கூட்டம் வாழ்த்துப்பாட வாழ்க்கை வானவில் வண்ணங்களால் நிறைந்திட இதயம் கனிந்த புனித ரமலான் வாழ்த்துகள்
  • இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி வளர்பிறையாய் உங்கள் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்
  • சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரமலான் வாழ்த்துகள்
  • இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வு மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்துகள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP