பொங்கல் டூ தீபாவளி 2025ல் இத்தனை நாட்கள் பொது விடுமுறையா ? தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.  புத்தாண்டில் தொடங்கி கிறிஸ்துமஸ் வரை மொத்தம் 23 பொதுவிடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
image

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஜனவரி 1 புத்தாண்டில் தொடங்கி டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் வரை மொத்தம் 23 பொதுவிடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பானது தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அதிகபட்சமாக ஜனவரியில் 4 பொதுவிடுமுறை நாட்கள் உள்ளன. தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது விடுமுறை நாட்களின் விவரம் இங்கே...

tamilnadu government holidays 2025

எண் பொதுவிடுமுறை தேதி நாள்
1. புத்தாண்டு 01.01.2025 புதன்கிழமை
2. பொங்கல் 14.01.2025 செவ்வாய்
3. திருவள்ளுவர் நாள் 15.01.2025 புதன்கிழமை
4. உழவர் திருநாள் 16.01.2025 வியாழன்
5. குடியரசு தினம் 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை
6. தைப்பூசம் 11.02.2025 செவ்வாய்
7. தெலுங்கு வருடப் பிறப்பு 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை
8. ரம்ஜான் 31.03.2025 திங்கட்கிழமை
9. வணிக வங்கி, கூட்டுறவு வங்கி மட்டும் 1.04.2025 செவ்வாய்
10. மகாவீர் ஜெயந்தி 10.04.2025 வியாழன்
11. தமிழ் புத்தாண்டு 14.04.2025 திங்கள்
12. புனித வெள்ளி 18.04.2025 வெள்ளி
13. உழைப்பாளிகள் தினம் 1.05.2025 வியாழன்
14. பக்ரித் 7.06.2025 சனிக்கிழமை
15. முகர்ரம் 06.07.2025 ஞாயிறு
16. சுதந்திர தினம் 15.08.2025 வெள்ளிக்கிழமை
17. கிருஷ்ண ஜெயந்தி 16.08.2025 சனிக்கிழமை
18. விநாயகர் சதுர்த்தி 27.08.2025 புதன்கிழமை
19. மிலாடி நபி 05.09.2025 வெள்ளிக்கிழமை
20. ஆயுத பூஜை 01.10.2025 புதன்கிழமை
21. விஜய தஸமி 02.10.2025 வியாழன்
22. காந்தி ஜெயந்தி 02.10.2025 வியாழன்
23. தீபாவளி 20.10.2025 திங்கள்
24. கிறிஸ்துமஸ் 25.12.2025 வியாழன்
ஜனவரி மாதத்தில் திருவள்ளூவர் நாள், உழவர் திருநாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாட்டு பொங்கல், காணும் பொங்கலை குறிக்கிறது. அதே போல அம்பேத்கர் ஜெயந்தியை தேடாதீர்கள். அம்பேத்கர் ஜெயந்தி தமிழ் வருடப் பிறப்புடன் சேர்ந்து வருகிறது. இதில் நவம்பர் மாதத்தில் மட்டும் எந்த பொது விடுமுறையும் கிடையாது. விஜயதஸமியும் காந்தி ஜெயந்தியும் ஒரே நாளில் வருவதால் பொதுவிடுமுறை நாட்களில் ஒன்று குறைந்துள்ளது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP