குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  என்பிஎஸ் வாத்சல்யா என்ற ஓய்வூதிய திட்டத்தை செப்டம்பர் 18 ல் தொடங்கி வைத்தார்.
image

மத்திய அரசு சார்பில் குழந்தைளுக்காக வாத்சல்யா என்ற பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய குழந்தைகளைப் பொறுப்புடனும், நிதி ஆதாரத்துடன் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலான விஷயம். என்ன தான் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவது ஒரு பங்காக இருந்தாலும் அவர்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய பணத்தை சேமித்து வைப்பதும் பெற்றோர்களின் முதன்மை கடமைகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் பெற்றோர்களின் எண்ணத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

ஆம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 18 அன்று குழந்தைகளுக்கான பென்சன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். தேசிய ஓய்வூதிய அமைப்பு தற்போது குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா (NPS vatsalya) என்ற பென்சன் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. பெரியவர்களுக்குத் தானே பென்சன் திட்டம் இருக்கும்? அது எப்படி குழந்தைகளுக்கு பென்சன் திட்டம் உள்ளது? என கேட்கிறீர்களா? இதோ அதற்கான முழு விபரம் இங்கே.

nps vatsalya schene

என்பிஎஸ் வாத்சல்யா பென்சன் திட்டம்:

குழந்தைகளுக்கான பென்சன் திட்டத்தை பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை குழந்தைகள் வரை அப்ளை செய்ய முடியும். இந்தியர்கள் மட்டுமல்ல வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த பென்சன் திட்டத்திற்கு அப்ளை செய்யலாம். இதற்கான அதிகபட்ச தொகைக்கு உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

குழந்தைகளுக்கான பென்சன் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றால் வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் போன்ற பதிவு செய்யப்பட்ட இடங்களில் ஆன்லைன் அல்லது பெற்றோர்கள் நேரில் சென்று பென்சன் திட்டத்திற்கான கணக்கைத் தொடங்கலாம். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்து 18 வயது வரை ஓய்வூதியக் காப்பீட்டை உருவாக்க முடியும்.

பென்சன் பங்களிப்பு:

pension scheme

ஆன்லைன் அல்லது நேரில் மூலமாக தொடங்கப்படும் என்பிஎஸ் வாத்சல்யா பென்சன் திட்டத்திற்கான கணக்கைத் திறந்தவுடன் குறைந்தபட்ச தொடக்கப் பங்களிப்பாக ரூ. ஆயிரம் செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து ஆண்டுக்கு ரூ. 1000 வரை பங்களிப்பு செலுத்தலாம். குழந்தைகளுக்கு 18 வயது ஆனதும், கணக்கு தானாகவே வழக்கமான என்பிஎஜஸ் அடுக்கு 1 கணக்கான மாற்றப்படும். இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் 18 ஆண்டுகளுக்கு ரூபாய் 10,000 வருடாந்திர பங்களிப்பு செய்தால், இந்த காலகட்டத்தின் முடிவில், 10 சதவீத வட்டியுடன் (RoR) விகிதத்தில், முதலீடு தோராயமாக ரூபாய் 5 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளதால் நிச்சயம் குழந்தைகளுக்கு சிறப்பான பென்சன் திட்டமாக இது செயல்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP