New Year Wishes : கனவுகளும் ஆசைகளும் நிறைவேறிட உளங்கனிந்த 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

உலகமே 2025ஆம் ஆண்டை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் இந்த நேரத்தில் புதிய தொடக்கங்களுக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்வது சிறப்பான விஷயமாகும். இந்த பதிவில் புத்தாண்டு வாழ்த்துகள், கவிதைகள் ஆகியவை பகிரப்பட்டுள்ளன.
image

2024ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் புதிய கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு 2025ஆம் ஆண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். புத்தாண்டை கொண்டாடி வரவேற்கும் அதே வேளையில் அன்புக்குரியவர்களிடம் வாழ்த்துகளை பகிர்வதும் சிறப்பான விஷயமாகும். 2025ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்திட நண்பர்களுடனும், குடும்பத்தினருடம் பகிர வேண்டிய வாழ்த்துகள் இங்கே...

New Year wishes greetings messages

புத்தாண்டு வாழ்த்து 2025

எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையும் இனிய வருடமாக
அமைந்திட மனங்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்... துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்... கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும்... 2025ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்

மலரும் புத்தாண்டு நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியை தரும் ஆண்டாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள்

புத்தாண்டில் புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.

அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமைய உளங்கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நல்ல ஆரோக்கியத்தோடும் அளவில்லா வளத்தோடும் புதிய நம்பிக்கைகளோடும் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும்... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பிறக்கும் புதுவருடம் அன்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்... மாற்றங்கள் மலரட்டும்...
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்... 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புதியதொரு வருடம் புத்தம் புது பூ போல மலர்கிறது... 365 நாட்களும் இந்த பூ உங்கள் வாழ்வில் வாசம் வீசட்டும்... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக இந்த ஆங்கில புத்தாண்டு மலரட்டும்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2025

புத்தாண்டு வளமானதாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்

நிறைந்த வளம் மிகுந்த சந்தோஷம் இவற்றை எல்லாம் இந்த புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் நிறை செல்வமும் நீடித்த வாழ்வும் அமையட்டும்... புத்தாண்டு வாழ்த்துகள் 2025

நினைத்த காரியம் நடக்க... முயற்சிகள் வெற்றிபெற... வாழ்க்கை சிறக்க... புன்னகை மலர... இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சென்ற ஆண்டிற்கு நன்றி கூறி புதிதாக பிறந்துள்ள இந்த ஆண்டை உற்சாகத்தோடு வரவேற்போம்... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2025

மேலும் படிங்கChristmas Wishes 2024 : அன்பை விதைத்த இயேசு பிரானின் பிறப்பை கொண்டாடும் உள்ளங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP