மதுரை மாநகரில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த நல்ல நாளில் தீர்க்க சுமங்கலி வரம் பெற மீனாட்சி அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும், தாலி கயிறு மாற்றுவதற்கு உகந்த நேரம் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருமண நிகழ்வின் போது ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய இல்லற வாழ்க்கை நன்றாக தொடர வேண்டும், சொக்கநாதருடன் மீனாட்சி அம்மன் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்கிறாளோ அதே போல தன் கணவரும் தானும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ மீனாட்சி அம்மன் அருள வேண்டும் என வேண்டிக் கொள்ளும் அற்புதமான இந்த நாள் திருக்கல்யாண நாளாகும்.
நாம் மீனாட்சி அம்மனிடம் எது வேண்டும் என நினைக்கிறோமோ அடுத்த முறை தரிசிப்பதற்குள் மீனாட்சி அம்மன் கட்டாயமாக அதை கொடுப்பாள். சொக்கநாதர் மீது மீனாட்சி கொண்டிருந்த ஈர்ப்பு, பரிவு, அன்பு, பாசம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கற்றுக் கொள்ள வேண்டிய இல்லற மாண்பு ஆகும்.
அம்பிகையும் சொக்கநாதரும் இணைந்து திருவிழாகோலம் காணக்கூடிய சித்திரை திருவிழாவின் முத்திரை நாளாக விளங்ககும் திருக்கல்யாண நிக்ழவு அன்று நம்முடைய குடும்பம் நன்றாக இருக்கவும் இன்பமான வாழ்க்கை அமைந்திடவும் மீனாட்சியை உள் அன்போடு வணங்குவதற்கு உகந்த நாள் இந்த திருகல்யாண நாள்.
குடும்பத்திற்குள் ஒற்றுமை, மகிழ்வு, சந்தோஷமான சூழல் நிலவுவதில்லை என்றால் குடும்பத் தலைவியாக திருக்கல்யாண நாளில் மீனாட்சி அம்மனை வழிபடுவது பலன்களை தரும். மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்திய மீனாட்சி - சொக்கநாதரிடடம் நாம் விரும்பியதை கேட்டால் நிச்சயம் நடக்கும்.
வரும் 21ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்வு கோயில் மண்படத்தில் 12 ஆயிரம் பக்தர்களுக்கு நடைபெறவுள்ளது.
திருக்கல்யாண நேரம் : காலை 8:35 மணி முதல் 8:59 மணி வரை
திருக்கல்யாண நிகழ்வின் போது பெண்கள் தாலி கயிறு மாற்றுவது விஷேமானது. தாலி கயிறு மாற்ற விரும்பும் பெண்கள் காலையிலேயே பழைய கயிற்றில் உள்ள திருமாங்கல்யத்தை எடுத்து கழுவி சுத்தம் செய்து புது கயிற்றுக்கு மாற்றி தயாராக வைக்கவும்.
இதில் அவசரம் காட்ட வேண்டாம். ஏனென்றால் தாலி கயிற்றில் உள்ள மாங்கலயத்தை வரிசையாக எடுத்து மீண்டும் கோர்ப்பது எளிதான காரியமல்ல. இதன் பிறகு மீனாட்சி அம்மனின் படத்திற்கு முன்பாக திருமாங்கல்யத்தை வைக்கவும்.
பெரும்பாலான தொலைக்காட்சிகளில் திருக்கல்யாண நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில் காலை 8.35 முதல் 8.59 மணிக்கு உட்பட்டு கணவரை உங்கள் கழுத்தில் புதிய கயிறு கட்ட சொல்லுங்கள். கணவர் வீட்டில் இல்லையெனில் நீங்களே கயிறு மாற்றிக் கொள்ளுங்கள்.
இதனால் மீனாட்சியின் அனுகிரகத்தை பெற்று மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கை தொடரும். இதன் பிறகு சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம் கொண்டு நெய்வேத்தியம் செய்து இருவருக்கு உணவுக்கு அளியுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com