பொங்கல் கொண்டாட்டத்தின் மூன்றாவது தினத்தை காணும் பொங்கல் என குறிப்பிடுகிறோம். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல், கணுப் பொங்கல் எனவும் அழைக்கலாம். இந்த பொங்கல் உறவுகளை ஒருங்கிணைக்கும் திருநாளாக பார்க்கப்படுகிறது.
நீர்நிலைகளுக்கு சென்று நீராடுவதும் அங்கு வழிபாடு செய்வதுமான தகவல்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பரிபாடல் என்ற ஒரு இலக்கியத்தில் நீராடல் குறித்த தகவல் இருக்கும். இன்று நீராடலை குறிப்பிடுவது போல அன்றைக்கே பரிபாடலில் மார்கழி நீராடல், தை நீராடல் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
நமது முன்னோர்கள் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பல்வேறு வகையான உணவுகளைத் தயாரித்து அதை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு குளம் ஆல்லது ஆற்றங்கரைக்கு செல்வார்கள். நகரங்களில் கடற்கரைகளுக்கு செல்வது உண்டு. அன்றைய நாளில் வீடு, உணவங்களில் சாப்பிடுவதை விடுத்து இயற்கைவெளியை நோக்கி செல்வார்கள். அதுவும் குறிப்பாக நீர்நிலைகளுக்கு. அங்கு சென்றவுடன் பாய், ஜமக்காளம் விரித்து அமர்ந்த பிறகு ஆற்றுநீர் மற்றும் குல தெய்வத்தை வேண்டுவார்கள்.
எப்படி வணங்குவார்கள் என்று சொன்னால் மார்கழி மாதத்தில் தினமும் கோலம் போட்டு சானத்தின் மீது பூசணி பூ வைப்பது போல அதை காய வைத்து எருவட்டி தயாரித்து இருப்பார்கள். அதை அப்படியே ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து அதன் மீது சூடம் பொறுத்தி குலவையிட்டு தண்ணீரில் செலுத்தி விடுவார்கள். அதன் பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிட்டு மகிழ்வார்கள். இதனிடையே கபடி, கம்பு சுத்துவது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற ஆங்காங்கே குழந்தைகள் ஓடி பிடித்து விளையாடுவார்கள்.
மேலும் படிங்கBhogi 2024 : போகி கொண்டாட்டத்தில் எதை எரிக்கலாம் ? எதை எரிக்க கூடாது ?
இதை நாம் காணும் பொங்கல் என சொல்கிறோம். உங்கள் ஊரில் ஆற்றங்கரை, குளம், கடற்கரை என எதுவும் இல்லை என சொன்னால் நீங்கள் நண்பர்கள் வீட்டிற்கு செல்லலாம் அல்லது அனைவரும் ஒரு பொது இடத்தில் சந்திக்கலாம். புல்வெளி அல்லது மரத்தடியில் அமர்ந்து அனைவரும் அரட்டை அடிக்கலாம்.
காணும் பொங்கல் என்றாலே உறவு, உணவு, உணர்வுகளை வெளிப்படுத்துவது என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது அன்றைய நாளில் உறவுகளைச் சந்தித்து உணவுகளைப் பகிர்ந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே காணும் பொங்கலின் சிறப்பு அம்சமாகும்.
மேலும் படிங்க Makar Sankranti 2024 : மகர சங்கராத்தியின் முக்கியத்துவம் ! அதன் முழு பின்னணி
அன்றாட வேலைப் பளுவில் இருந்து விடுபட்டு நண்பர்களோடும், உறவினர்களோடும் பொதுஇடத்திற்கு சென்று அதிலும் பொதுவாக ஆற்றங்கரை, கடற்கரை போன்ற நீர்நிலைகளுக்கு சென்று அங்கு நமது குல தெய்வத்தையும் வழிபட்டுக இனிமையாகப் பேசி உண்டு மகிழ்ந்து கொண்டாடும் நாளே காணும் பொங்கலாகும். தமிழர் பாரம்பரியத்தில் இது ஒரு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation