herzindagi
republic day celebration

Republic Day 2024 Speech: மாணவர்களே, குடியரசு தினத்தில் உரை நிகழ்த்த திட்டமா? அப்ப மறக்காமல் இதை பாலோ பண்ணுங்க!

<span style="text-align: justify;">பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து போராடி சுதந்திரத்தைப் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலோடு பயணித்து வருகிறோம்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-01-23, 14:10 IST

இன்றைக்கு நாம் வாழும் சுதந்திரமான வாழ்க்கைக்குப் பின்னால் பல போராட்டங்கள் மறைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து போராடி சுதந்திரத்தைப் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலோடு பயணித்து வருகிறோம். டாக்டர் அம்பேத்கார் அவர்களால் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அன்றைய நாளிலிருந்து இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கடைப்பிடித்து வருகிறோம். இச்சட்டங்கள் எதுவும் இல்லையென்றால் என்றைக்கோ? நாம் அடிமையின் உச்சத்திற்கு தள்ளப்பட்டிருப்போம். இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஜனவரி 26 யை ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் 75 ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது. 

குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கக்கூட மாணவர்களுக்கு குடியரசு தினம் குறித்த பேச்சு போட்டிகள் அல்லது குடியரசு தின உரையை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். உங்களது குழந்தைகளுக்கும் இது போன்ற விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டுள்ளதா? அப்படியென்றால் என்ன தலைப்புகளில் பேசலாம் மற்றும் மாணவர்களின் பேச்சின் மூலம் பார்வையாளர்களை எப்படி கவர்வது? என்பது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இதை படியுங்கள் உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

republic

குடியரசு தின உரைக்கான சில தலைப்புகள்:

  • ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேசக்கூடிய மாணவர்கள் ஏன் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது? அம்பேத்கார் யார்? குடியரசு தின விழாவின் முக்கியத்துவம் குறித்த தலைப்புகள் தான் பிரதானமாக இடம் பெறும். நீங்கள் கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்? என்று நினைத்திருந்தால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…..
  • மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என அனைத்திலும் வேறுபட்டிருந்தாலும் இந்தியா என்ற ஒற்றைச்சொல்லில் தான் பயணித்து வருகிறார்கள். இதை நீங்கள் தலைப்புகளாக தேர்வு செய்யலாம்.. “
  • “வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவும், 75 ஆவது குடியரசு தின விழாவும்”!
  • இந்தியர்களுக்காக உள்ள அடிப்படை சட்டங்கள் என்னென்ன? இதன் மூலம் பெறக்கூடிய லாபம்? என தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். 
  •  இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியும், நிலாவில் கால் பதித்த இஸ்ரோவும்!
  •  அடிப்படை சுதந்திரம் தரக்கூடிய சட்டங்கள் என்னென்ன?
  •  பெண்களும் இந்திய அரசியலமைப்பு சட்டம்!

இது போன்ற பல்வேறு தலைப்புகளில் நீங்கள் குடியரசு தின உரைக்கானத் தகவல்களைத் திரட்டி மாணவர்கள் உரையைத் தொடங்கவும்.

பார்வையாளர்களை ஈர்க்க எப்படி பேச வேண்டும்?

என்ன தான் நீங்கள் சரியான தலைப்புகளைத் தேர்வு செய்து பேசினாலும் சில விஷயங்களைக் கடைப்பிடிக்காவிடில் உரை தெளிவாக இருக்காது.

  • பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கம்பீரமாக உங்களது உரையைத் தொடங்குங்கள்.
  • மேடையில் ஏறச் செல்வதற்கு முன்பாக கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு, மேடையில் ஏறவும். கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாக இது உங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

Republic day speech in tamil

  • சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய உரை இருந்தால், அவர்கள் பயன்படுத்திய முழக்கங்கள் அல்லது வாசகங்களுடன் உங்களது உரையைத் தொடங்கவும்.
  • உங்கள் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்கவும், தேவையற்ற வாசகங்களை தவிர்க்கவும். மைக்கிற்கு மிக அருகில் அல்லது வெகு தொலைவில் நிற்க வேண்டாம். பொதுவாக, மைக்ரோஃபோனிலிருந்து 4 முதல் 5 அங்குல தூரத்தில் நின்று பேசவும்.
  • உங்கள் கைகளை ஒரே இடத்தில் நிலைநிறுத்த வேண்டாம். உங்கள் கைகளை நகர்த்தி சில சைகைகளைச் செய்ய முயற்சி செய்யும் போது பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும். உங்களின் பார்வை எப்போதும் பார்வையாளர்களை நோக்கி தான் இருக்க வேண்டும்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com