herzindagi
image

Pongal Festival 2025: தை திருநாளில் முன்னோர்கள் கடைப்பிடித்த முக்கிய நடைமுறைகள்

தமிழர்களின் பாராம்பரியத்தைப் பறைசாற்றும் பொங்கல் திருநாளின் முக்கியத்துவம் மற்றும் இந்நாளில் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.  
Editorial
Updated:- 2025-01-09, 15:07 IST

தமிழகம் மட்டுமல்ல தமிழர்கள் வாழக்கூடிய அனைத்து நாடுகளில் பாராம்பரியம் சற்று குறையாமல் பொங்கல் திருநாளானது கோலாகலமாகக் கொண்டாடப்படும். சங்க காலத்தில் இருந்தே உழைக்கும் விவசாயிகளுக்கும்,  அவர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதத்தின் முதல் 3 நாட்களுக்கு பொங்கல் திருநாளானது கொண்டாடப்படும். 

மார்கழி 30 ல் போகிப்பண்டிகை, தை 1 ஆம் நாள் அறுவடை திருநாள், தை 2 ஆம் நாள் மாட்டுப் பொங்கல், தை 3 ஆம் நாள் காணும் பொங்கல் என கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

தை திருநாளும் முக்கிய சடங்குகளும்: 


விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் தை திருநாளுக்கு முந்தைய நாள் அதாவது மார்கழி 30 ல் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம். இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்கள், தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நடைமுறையை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

 மேலும் படிக்க: Pongal panaikizhanu : பொங்கல் பண்டிகையும் பனங்கிழங்கும்!

சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்று கூறினாலும், உழைக்கும் மக்களும், விவசாயிகளும் தை முதல் நாளை தமிழ் மாதத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கின்றனர். சங்க காலம் முதல் தை திருநாளுக்கு முந்தைய நாளை போகிப் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். பழைய பொருட்களை மட்டும் வெளியில் தூக்கி எறியும் நாளாக பார்க்காமல் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும், தீய குணங்களையும் விட்டொழிய வேண்டும் என பழைய பொருட்களையெல்லாம் கட்டாயம் தீயிட்டு கொண்டாட வேண்டும். இதோடு வீடுகளைச் சுத்தம் செய்து, சுண்ணாம்பு கோலம் மற்றும் மாவிலைத் தோரணம், அம்மங்காப்பு செடி போன்றவற்றைக் கட்டி தை மகளை வரவேற்க போகியில் தயாராக இருக்க வேண்டும்.

bhogi 2025



தை திருநாள்: 

போகிப் பண்டிகைக்கு அடுத்தப்படியாக தை திருநாளைக் கொண்டாடுகிறோம். விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த சூரிய பகவானுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாளில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். பின்னர் சூரிய உதயத்தின் போது வீட்டு வாசலின் முன்பு மண் பானையில் மஞ்சள் குலையும், குருத்தோடு கரும்புகளைக் கட்டியும்  பொங்கல் வைக்க வேண்டும். வாழை இலையில் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், நெல், பருப்பு, மஞ்சள் போன்றவற்றை வைத்து வழிபடலாம். இவ்வாறு உழவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மங்கலத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதமாக நம் முன்னோர்கள் இந்த முறையை கடைப்பிடித்து வந்துள்ளனர்.

pongal 2025 rituals

மாட்டுப் பொங்கல்:


ஆண்டு முழுவதும் உழவுக்கும், விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் உறுதுணையாக இருக்கும் காளைக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகை தான் மாட்டுப் பொங்கல். வருடத்தின் அனைத்து நாட்களிலும் காளைகளைப் பிள்ளைகள் போன்று வளர்த்தாலும், மாட்டுப் பொங்களன்று அவற்றை இன்னமும் மகிழ்வுடன் வைத்திருப்பார்கள். குறிப்பாக காலையிலே குளிக்க வைப்பதோடு கொம்புகளில் வர்ணம் பூசி மாலை அணவித்து மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் காளைகளை அலங்கரித்து தெருக்களில் உலாவிடும் நடைமுறைகளைப் பின்பற்றினார்கள்.

mattu pongal

மேலும் படிக்க: பொங்கல் போட்டிகள் : கபடி, பானை உடைத்தல், ஸ்லோ சைக்கிள், சறுக்கு மரம் ஆடத் தயாரா?


இதே போன்று காணும் பொங்களானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்வுடன் இருக்கும் நாளாகவும் ஒய்வு எடுக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.    

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com