மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா வரலாறு - தெப்பத்திருவிழா எப்போது?

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் தெப்பத்திருவிழா எப்போது?  அதன் வரலாறு என்ன? மாரியம்மன் தெப்பக்குளத்தின் ஆச்சரியமூட்டும் ஆன்மீக அறிவியல் தகவல்கள் இந்த பதிவில் விரிவாக உள்ளது.
image

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரை மாதம் சித்திரை திருவிழாவும், மாசி பங்குனி என அனைத்து தமிழ் மாதங்கள் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் இதில், தை மாதம் நடைபெறும் தெப்பத் திருவிழா உற்சவம் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா உற்சவத்தில் தொடக்க நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் உட்புற வளாகத்தில் கொடிக்கம்பத்தில் வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் துவங்கியது.

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தெப்பக்குளம்


மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழா வரலாறு

history of the theppam festival at the meenakshi amman temple in madurai  meenakshi theppa thiruvizha 2025-011

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி (தை) மாதம் தைப்பூச பௌர்ணமி அன்று தெப்பத் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெறும். " பிறவி எனும் கடலில் விழுந்தவர்களை இறைவனின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்க்கும்" என்பதை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காக தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

தெப்ப உற்சவம் நடக்க வேண்டும் என்றால் தெப்பக்குளத்தில் நீர் முழுவதுமாக நிரம்பி இருக்க வேண்டும். ஊருக்கு நடுவே உள்ள குளத்தில் நீர் நிறைந்து இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பஞ்சமே வராது. எனவே தண்ணீரைப் போலவே பணத்தையும் பொதுமக்கள் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். தண்ணீரின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்பதற்காகவே தெப்பத் திருவிழா உற்சவம் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மன்னர் அரண்மனை கட்டுவதற்காக தற்போது தெப்பக்குளம் இருக்கும் பகுதியில் மணல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து அரண்மனை கட்டிய பின்பு மணல் தோன்றிய இடம் மிகப்பெரிய பள்ளமாக இருந்துள்ளது. இந்த பள்ளத்தை சீரமைக்க எண்ணிய மன்னர் திருமலை நாயக்கர் அப்பகுதியை சதுர வடிவில் வெற்றி 1645 ஆம் ஆண்டில் தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றையும் காட்டினார்.

history of the theppam festival at the meenakshi amman temple in madurai  meenakshi theppa thiruvizha 2025

இந்த தெப்பக்குளம் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே முக்குருணி பிள்ளையார் என மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ளார். இதனால் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தெப்பத் திருவிழா எடுக்கப்படுகிறது. வண்ணமயமான இந்த திட்டத் திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள். இந்த தெப்பக்குளம் 16 ஏக்கர் பரப்பளவு, 305 மீட்டர் நீளமும் 290 மீட்டர் அகலமும் கொண்டது.இந்த மாரியம்மன் தெப்பக்குளம், ஆசியாவிலேயே, தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தெப்பக்குளமாக உள்ளது.

மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழா 2025

768-512-10407731-thumbnail-3x2-ss

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.07.02.2025- வலை வீசுதல், 08.02.2025- எடுப்பு தேர், 10.02.2025 கதிர் அறுப்பு திருவிழாவும் நடைபெறும். இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வாக தைப்பூதச பௌர்ணமி தினமான பிப் 11ம் தேதி காலை தெப்பத்திருவிழா கோலாகலமாக நடை பெரும்.

இதனை முன்னிட்டு அதிகாலை மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்த பின் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் இதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சியம்மன் அவுதா தொட்டியுடனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்கள்.


இதனையடுத்து தேவாரம், திருவாசகம், உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் ஓதியபடி தெப்பதேர் நகரம். அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டு அவர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் இரு முறை சுவாமியும், அம்மனும் வலம்வருவார்கள்.

மின்னொளியில் ஜொலிக்கும் தெப்பம்

Untitled design - 2025-02-08T142257.848

இதனையடுத்து தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மாலை மண்டபத்தில் சுற்றி வீதி உலா வந்த பின்னர் இரவு பௌர்ணமி முழு நிலவின் ஓளி தெப்ப நீரில் எதிரொளித்த நிலையில் தெப்ப மைய மண்டபமும், முழுவதும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் அம்மனும், சுவாமியும் எழுந்தருள்வார்கள். இதனை மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் முழுவதுமாக வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் முழுவதுமாக நீர் நிரம்பிய நிலையில் தெப்பத்திருவிழாவினை கண்டுகளித்தது கண்கொள்ளா காட்சியாக அமையும்.

மதுரை மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா தெப்ப தேரிலிருந்து வலம்வந்த பின்னர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலின் வெளியே தங்ககுதிரையில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனி பல்லக்கிலும் எழுந்தருளி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வார்கள்.

இந்த தெப்ப உற்சவத்தின்போது மட்டும் தான் சுவாமியும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினாலும் கூட சுவாமியை விட அம்மன் கூடுதலாக ஒரு வாகனமான அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருளுவார் என்பது கூடுதல் சிறப்பு.

நடை அடைப்பு

தெப்ப திருவிழா உற்சவத்திற்காக மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரும் கோவிலை விட்டு தெப்பக்குளம் வருவதால் அன்று ஒரு நாள் மட்டும் மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:முருகனுக்கு உகந்த வெற்றிலை தீபம்; வேண்டிய வரம் கிடைக்க இத்தனை நாட்கள் விளக்கேற்றவும்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil


image source: meenakshi amman temple


HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP