
கிறிஸ்துமஸ் என்றவுடன் நம்மில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சான்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா.. டிசம்பர் மாதம் தொடங்கினாலே குட்டையான தோற்றம், தொப்பை வயிறு, வெள்ளை தாடி, சிவப்பு நிற சட்டையோடு அனைவரது வீடுகளிலும் பரிசுகளோடு வலம் வருவார் கிறிஸ்துமஸ் தாத்தா. இவரது வருகை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. யார் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா? இயேசு பிறந்த தினத்தில் ஏன் கிறிஸ்துமஸ் தாத்தா? பரிசுகளை வழங்குகிறார் என்பது குறித்த தகவல்களை இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம்.
கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளிலும் , சில கீழை நாடுகளில் மட்டும் தென்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா தற்போது உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு பரிசுகளை வாரி வழங்குகிறார். ஏன் இவ்வாறு செய்கிறார் ? என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்னதாக யார் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா? என்பது குறித்த வரலாற்றுத் தகவல்கள்.

சான்டா என்றும் சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் ஒரிஜினல் தாத்தா 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிக்கோலஸ் என்பவர் தான். ரோமா சாம்ராஜ்ஜியத்தில் பிறந்து துருக்கி நாட்டில் பிஷப்பாக பணிபுரிந்தார். அப்போது ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை மனதார செய்து வந்தவர் தான் நிக்கோலஸ். இரக்கம், நல்லுணர்வு, குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் என மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து வந்தார் நிக்கோலஸ்.
அந்த காலத்தில் சிவப்பு நிற அங்கியுடன் வெள்ளைக் குதிரையில் அமர்ந்து குழந்தைகளுக்குப் பரிசுகளைக் கொடுத்து மகிழ்ந்து வந்தார் ஒரிஜினல் கிறிஸ்துமஸ் தாத்தாவான நிக்கோலஸ். இப்படி உதவி செய்வதற்கு யாரிடமும் பணம் வாங்கியது இல்லை என்றும் இவருடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்றுத் தான் மக்களுக்கு தேவைப்படக்கூடிய உதவிகளை வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறுகிறது.
இவ்வாறு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இயேசு கிறிஸ்துவதைப் போன்று ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார் ஒரிஜினல் கிறிஸ்துமஸ் தாத்தவான நிக்கோலஸ். இவர் டிசம்பர் 6 ஆம் தேதியன்று உயிரிழந்தார். இந்த நாளிலிருந்து இவரின் பெருமைகள் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.

சிவப்பு நிற அங்கி அணிந்து எப்படி ஏழை எளிய மக்களுக்கு உதவுகளைச் செய்தாரோ? அது போன்று டிசம்பர் மாதம் தொடங்கினாலே பலரும் நிக்கோலஸ் போன்று வேடமணிந்து உதவிகளைச் செய்ய தொடங்கினார்கள். குறிப்பாக குழந்தையில் உலகமம முழுவதும் பலரும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அனைவரையும் மகிழ்வித்து வந்தனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com