
ஒரு சில டிவி, ரேடியோ, செய்தித் தாழ் விளம்பரங்களை என்றும் நாம் நினைவில் வைத்திருப்போம். உதாரணத்திற்கு பார்லே ஜி சிறுமி, அமுல் செய்தித் தாழ் விளம்பர சிறுமி நம் நினைவில் நீங்காதவை. இன்றைய 2k கிட்ஸிற்கு இதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 20-25 ஆண்டுகளுக்கு முன்பாக நம் கவனத்தை ஈர்த்த விளம்பரங்களில் வாஷிங் பவுடர் நிர்மாவும் ஒன்று. ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷனில் இந்த விளம்பரத்தை கேட்டிருப்போம், பார்த்திருப்போம். வாஷிங் பவுடர் நிர்மா... வாஷிங் பவுடர் நிர்மா... பாலை போல வெண்மை நிர்மாவாலே வளமை என ஒலிக்கும் 10-20 விநாடி விளம்பரம் அது. இந்த துணி சோப்பு தூள் விளம்பரத்தில் ஒரு சிறுமியின் படம் இருக்கும். அந்த சிறுமி யார் ? சிறுமிக்கும் விளம்பரத்திற்குமான தொடர்பு ? சிறுமியின் சோக பின்னணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

துணி சோப்பு தூள் பொருள் மற்றும் அந்த விளம்பரத்தில் நாம் பார்த்த சிறுமியின் பெயர் நிருபாமா. அச்சிறுமியின் பெயரே துணி சோப்பு தூளுக்கு வைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு குஜராத்தை சேர்த்த கர்சன்பாய் என்பவர் நிர்மா என்ற பெயரில் துணி துவைக்கும் சோப்பு பவுடர் நிறுவனத்தை தொடங்கினார். கர்சன்பாய் மகளின் பெயர் நிருபாமா. தனது அன்பு மகளை நிர்மா என்று செல்லமாக அழைப்பார்.
பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது நிருபாமா எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். அந்த நேரத்தில் கர்சன்பாய் சொந்தமாக துணி சோப்பு தூள் நிறுவனத்தை தொடங்கும் எண்ணத்தில் இருந்தார். அதன் பிறகு மகளின் நினைவாக நிறுவனத்திற்கு நிர்மா என பெயர் சூட்டினார்.
வேதியியல் படித்தவரான கர்சன்பாய் அரசு பணியில் இருந்த போதிலும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். 1960-70 காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் கிடைத்த துணி சோப்பு தூள் விலை உயர்ந்ததாக இருந்தது. வெகுஜன மக்களால் அவ்வளவு காசு கொடுத்து அதை வாங்க முடியவில்லை. இதை உணர்ந்த கர்சன்பாய் குறைவான விலையில் தரமான சோப்பு தூள் கண்டுபிடித்து மக்களிடையே கொண்டு செல்ல முடிவெடுத்தார். 700 ரூபாய் கடன் வாங்கி வீட்டிற்கு அருகிலேயே துணி சோப்பு தூள் தயாரிக்க தொடங்கினார். நிர்மா என வாஷிங் பவுடருக்கு பெயர் சூட்டி ஒரு கிலோ துணி சோப்பு தூளை 3 ரூபாய்க்கு விற்க முயன்றார். ஆரம்பத்தில் வியாபாரிகள் அதை வாங்க மறுத்தனர். அதன் பிறகு சைக்கிளில் வீடு வீடாக சென்று வியாபாரம் செய்தார். நிர்மா துணி சோப்பு தூளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கினர். 1988ல் நிர்மா வாஷிங் பவுடர் இந்திய விற்பனை சந்தையில் 60 விழுக்காடு இருந்தது.
நிறுவனத்தை தொடங்கிய போது நிருபாமாவின் புகைப்படம் துணி சோப்பு தூளில் இருந்தது. அப்போதெல்லாம் யாரும் புகைப்படத்தை விளம்பரத்தில் பயன்படுத்தியதில்லை. அதன் பிறகு கர்சன்பாய் பாக்கெட்டில் நிர்மா வெண்மை நிறை ஆடை அணிந்து நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்டார். நிர்மா நிறுவனத்தின் மதிப்பு சில ஆண்டுகளிலேயே கோடிக்கணக்கில் உயர்ந்தது.
புன்னகைத்த முகத்தின் பின்னணியில் இப்படியொரு சோகப் பின்னணியா ? ஆச்சரியமாக உள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com