காதல் உறவில் ஆண், பெண் யார் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் வலி கொடூரமானது. காதலில் தோல்வி அல்லது முறிவை எதிர்கொண்டே பிறகே எங்கு தவறு நடந்தது என யோசிக்க ஆரம்பிக்கிறோம். என்னுடைய தவறு தான், தோற்றுவிட்டேன், மனம் உடைந்து போனது, பல முறை முயற்சித்தும் அதிலிருந்து மீள இயலவில்லை. இனிமையான நெருக்கம், ஆழமான நட்பு, நம்பிக்கை, நல்ல புரிதல், மகிழ்ச்சிகரமான செக்ஸ், சாகசம் நிறைந்த பயணம், உயிரினும் உயிராக காதல் இருந்தும் முறிவு ஏற்படும் போது அதை பெண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தவறுகள் குறையும் போது நெருக்கம் அதிகரிக்கும், காதல் ஆழமாகும். ஒவ்வொரு பெண்ணும் காதல் உறவில் விரும்புவதை இதைத் தான். காதல் உறவை வலுப்படுத்த 5 முக்கிய இரகசியங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போதாவது நீங்கள் காதலிக்கும் ஆண் பிரச்னைகளை தீர்ப்பதிலும், சரி செய்வதிலும் ஆர்வம் காட்டுவதை பார்த்து இருக்கீற்களா ? காதல் உறவிடம் சவாலான ஒரு காரியத்தை கொடுத்து அதை முடிக்கச் சொல்லி பாருங்கள். ஆண்களுக்கு எப்போதும் தங்கள் பிரச்னையில் பிறர் தலையிட்டு சரி செய்வதை விரும்ப மாட்டார்கள். எத்தனை முறை நீங்கள் உதவி செய்ய முயற்சித்தாலும், ஆக்கப்பூர்வமான அறிவுரை கொடுத்தாலும், எதை செய்ய வேண்டும் என சொன்னாலும் உங்களுடைய ஈடுபாட்டை எதிர்பார்க்க மாட்டார்கள். ஆண்கள் எப்படி ஒரு பிரச்னையை எதிர்கொள்வார்கள் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். தவறு செய்து அதை அவர்களே திருத்திக்கொள்ள முயற்சிக்கட்டும். உங்களுடைய அறிவுரை தேவைப்பட்டால் அவர்களாக கேட்பார்கள். சில சமயங்களில் அவர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை வைக்காமலும் போகலாம்.
காதலிக்கும் ஆண் நபரை என்ன செய்தும் மாற்ற முடியவில்லை என பெண்கள் கோப்படுகின்றனர், வெறுப்படைகின்றனர், முற்றிலும் விரக்தியடைகின்றனர். ஆணின் மனநிலை எப்போதும் மாறாது. இதை நீங்கள் விரிவாக புரிந்து கொள்ளும் போது வாழ்க்கையிலும், காதல் உறவிலும் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய ஹீரோவாக இருப்பதே ஆணின் விருப்பம். காதல் உறவில் ஒவ்வொரு ஆணும் தான் பாராட்டப்பட வேண்டும் என விரும்புவது உண்டு. நீங்கள் தொடர்ச்சியாக இது தவறு அது தவறு என சொல்லிக் கொண்டே இருந்தால் தோழியாக கூட நீடிக்க முடியாது.
பெண்கள் இயல்பாகவே கதை சொல்லும் அல்லது புறணி பேசும் பழக்கம் கொண்டவர்கள். நாம் வாழ்க்கை அனுபவங்களை, சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். காதல் உறவில் உங்களுக்கு விருப்பமான விஷயங்களை சொல்வதற்கு கதை கூறுவதை முயற்சிக்கவும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என ஆணிடம் கூற முடியாது. எனவே கதை சொல்லி இருவருக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கவும். உங்களுடைய விருப்பத்தை கதைகளின் வாயிலாக சொல்லிவிட்டால் ஏழு மலை ஏறி வானில் இருக்கும் நட்சத்திரத்தை கூட கொண்டு வர முயற்சிப்பார்கள்.
உணர்ச்சிகளையும், மனநிலையையும் கட்டுக்குள் வைத்திட பல பெண்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உடல்நலத்திற்கும், காதல் உறவிற்கும் நல்லதல்ல. உங்களுடைய வாழ்க்கையை சமநிலையில் வைத்திட பிடித்தமான விஷயங்களை செய்து மகிழுங்கள். விருப்பமான உணவுமுறை, உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி, நல்ல நண்பர்களுடன் பழக்கம், பிடித்த வேலை செய்து எப்போதும் புத்துணர்வுடன் இருக்க முயற்சிக்கவும். பல நேரங்களை இவற்றை செய்ய தவறுவதால் எளிதில் எரிச்சல் அடைகிறோம். காதல் உறவிலும், வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அதிகரிக்க புதிய விஷயங்களை கண்டுபிடித்து ஈடுபாடு காட்டுங்கள்.
காதல் உறவில் பிடித்தமான நபருக்காக பல நேரங்களில் நம்முடைய விருப்பங்களை தவிர்த்து அதிக நேரம் செலவிடுகிறோம். காதல் உறவில் தொடர்ந்தாலும், தனி நபராக இருந்தாலும் உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ பிடித்ததை செய்யவும். உங்களுக்கான முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தவும். சுறுசுறுப்பாக இருங்கள், நட்பு வட்டாரத்தை அதிகரியுங்கள், கனவை நோக்கி பயணித்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com