பணியில் வார இறுதியை குறிக்கும் வெள்ளிக்கிழமை என்றுமே லட்சுமி தேவிக்கு உகந்தது. இன்றைய நாள் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையும் ? நிதி விஷயம், ஆரோக்கியத்தில் யாரெல்லாம் கவனம் கொள்ள வேண்டும் ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உங்கள் வாழ்க்கையில் இன்று முக்கியமான பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். நீல நிற ஆடை அணிந்து அதிர்ஷ்ட கதவை திறங்கள். பணியில் முழு கவனம் செலுத்துவீர்கள். பணி காரணமாக சோர்வடைவீர்கள். உணர்வுகளை கட்டுப்படுத்தி செயல்படவும்.
வீணாக செலவு செய்யாதீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். போதுமான நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள். உங்களை சந்திக்க விரும்பும் நபரை தவறாமல் சந்திக்கவும்.
கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உறவுகளிடம் இருந்து சற்று விலகி இருங்கள்.
அதீத அன்பு காட்டி ஏமாற்றம் அடையாதீர்கள். வாழ்க்கையின் முக்கியமான நபரை சந்திக்க போகிறீர்கள். முடிந்தவரை ஓய்வு எடுங்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசி மகிழ்வீர்கள்.
நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நிதி விஷயத்தில் வரவு இருக்கும். உடல்நலனிலும் மனநலனிலும் வலுவாக இருப்பீர்கள். பிறர் சொல்லும் உணர்வுப்பூர்வமான விஷயங்களை தலையில் ஏற்ற வேண்டாம்.
பேசுவதில் நிதானமும், கவனமும் தேவை. எடுக்கும் திடமான முடிவுகளுக்கு பலன் கிடைக்கும். தலைவலி ஏற்படலாம். நண்பர்களுடன் பேசுவதை தவிர்க்காதீர்கள்.
முதலீடு செய்வதற்கு இன்று ஏற்ற நாளாகும். நிதி விஷயத்தில் வரவு அதிகரிக்கும். எதிர்கால முதலீடுகளை பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள்.
நிதி விஷயத்தில் அதிர்ஷ்டம் அடிக்கலாம். வேலை அழுத்தம் கொடுக்கும் நபர்களுடன் கவனமாக இருங்கள். உடல் அசெளகரியமாக உணரலாம். பிடிவாத குணத்தை கைவிட்டு எல்லோரின் பார்வைக்கும் மதிப்பளிக்கவும்.
நிதி விஷயத்தில் செலவுகளை குறைக்கவும். உடல்நலன், மனநலன் இரண்டையும் சீராக வைத்திருக்கவும். பதற்றம் அடையாதீர்கள்.
காதல் உறவில் குழப்பம் அடையாதீர்கள். அமைதி காக்கவும். உங்கள் கவனத்தை சிதறடிக்க முயற்சிகள் நடக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. சூழ்நிலைக்கு ஏற்ற முடிவுகளை எடுக்கவும்.
எல்லா விஷயங்களிலும் சற்று அதிர்ஷ்டம் இருக்கும். நிதி விஷயத்தில் வரவு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நல்ல உணவுகளை சாப்பிடவும். எதை பேசக் கூடாது என உங்களுக்கு நன்றாக தெரியும்.
பழைய நினைவுகள் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். செலவினங்கள் அதிகரிக்கும். காயப்பட்ட விஷயங்களில் இருந்து மீண்டு விடுவீர்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com