herzindagi
image

2025 Rasipalan : கடக ராசிக்கு ஆரோக்கியம், நிதி விஷயங்களில் கவனம் தேவை

கடக ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடும் ஆண்டாக அமையும். சனி மற்றும் வியாழனின் பெயர்ச்சி இந்த ஆண்டில் தனிப்பட்ட வளர்ச்சியை தருகிறது. ஆன்மிக மற்றும் பொருளாதார ரீதியாக வலுப்பெறுவீர்கள்.
Editorial
Updated:- 2024-12-31, 15:59 IST

கடக ராசிக்கு 2025ஆம் ஆண்டு வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடும். சனி மற்றும் வியாழனின் நகர்வுகள் இந்த ஆண்டில் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நிதி ஆதாயம் உண்டு, ஆன்மிக பாதையில் பயணிக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியம் மற்றும் தொழில் விஷயங்களில் சவால்களை சந்திப்பீர்கள். ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

cancer horoscope predictions

கடக ராசிக்கு காதலும், உறவும்

தனிப்பட்ட உறவில் கலவையான நிகழ்வுகள் அரங்கேறும். 8ஆம் வீட்டில் சனி இருப்பதால் உறவில் உணர்ச்சி ரீதியான தடைகள் தொடரும், புரிதலின்மை நீடிக்கும். மே மாதத்தின் மத்தியில் இருந்து 12ஆம் வீட்டில் உள்ள வியாழனின் ஆதிக்கத்தால் அன்புக்குரியவருடன் ஆழமான புரிதல் உண்டாகும்.

கடக ராசியின் தொழில் & நிதி நிலைமை

சனி 8ஆம் வீட்டில் தொடர்வதால் ஆண்டின் தொடக்கத்தில் தொழில் ரீதியான சவால்கள் அதிகரிக்கும். நிதி இழப்பு அபாயம் உண்டு. முதல் பாதியில் பெரியளவில் வளர்ச்சி இருக்காது. மே மாதத்திற்கு பிறகு வியாழன் 12ஆம் வீட்டிற்கு பெயர்வதால் வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான கதவுகள் திறக்கும். முதலீடுகள் மற்றும் திட்டங்களில் ஆண்டின் இறுதியில் நல்ல பலன் கிடைக்கும்.

2025ல் ஆரோக்கியம்

இந்த ஆண்டில் கடக ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 8ஆம் வீட்டில் சனி இருப்பதால் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வரலாம். ஆண்டின் முதல் பாதியில் மன அழுத்தம், சோர்வு உண்டாகும். மே மாதத்திற்கு பிறகு வியாழன் 12ஆம் வீட்டிற்கு பெயர்வதால் நல்வாழ்விற்கான விஷயங்களில் ஆராய்ந்து செயல்படுவீர்கள். அடிக்கடி உடல் பரிசோதனை செய்யவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட முயற்சிக்கவும்.

மேலும் படிங்க 2025 புத்தாண்டு ரிஷப ராசிபலன் :  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி; ஆசைகள் நிறைவேறும்

கடக ராசிக்கு முக்கிய குறிப்புகள்

காதலும், உறவும்

கடக ராசிக்கு தனிப்பட்ட உறவுகளில் கலவையான சூழலே 2025ல் தொடரும். சனியின் தாக்கத்தால் உறவிகளில் உணர்ச்சி ரீதியான தடைகள் மற்றும் புரிதலின்மை நிலவும்.

தொழில் & நிதி

சனி 8ஆம் வீட்டில் தொடர்வதால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொழில் ரீதியாக பல சவால்களை சந்திப்பீர்கள். நிதி இழப்புகள் அல்லது நிதி சார்ந்த விஷயங்களில் தடை ஏற்படலாம். ஆண்டின் தொடக்கத்தில் கவனமாக இருங்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். சனி 8ஆம் வீட்டில் இருப்பதால் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வரும்.

2025ல் சிறந்த மாதங்கள்

ஜூலை, ஆகஸ்ட், நவம்பர்

2025ல் சவாலான மாதங்கள்

மார்ச், ஏப்ரல், அக்டோபர்

கடக ராசியின் பலவீனம்

திருப்தியற்ற மனநிலை

கடக ராசிக்கான தாரக மந்திரம்

பொறுமை, கவனம் இருந்தால் எந்தவொரு காரியமும் வெற்றி பெறும்.

2025ஆம் ஆண்டு புத்தாண்டு ராசிபலனுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com