
ஒவ்வொருவரும் தங்களது வீடுகளை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பார்கள். குறிப்பாக வீட்டிற்குள் இன்டீரியர் ஒர்க் செய்வதற்கு பெரும் மெனக்கெடுவார்கள். இதற்காக என்ன செய்யலாம்? யாரிடம் கேட்கலாம்? என பெரும் முயற்சியை மேற்கொள்வார்கள். சில நேரங்களில் அதிகம் செலவாகுமோ? என்ற அச்சமும் ஏன் இதை செய்ய வேண்டும்? என மனநிலைக்கு நம்மைத் தள்ளிவிடும். இதோ இதுபோன்றவர்களுக்காகவே குறைந்த பட்ஜெட்டிலும், அதே சமயத்தில் செலவில்லாமல் எப்படி வீட்டை அழகாக்கலாம் என்பது குறித்து தகவல்கள் சில உங்களுக்காக.

சிறிய வீடாக இருந்தாலும் பெரிய வீடாக இருந்தாலும் வீடுகளை அழகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த நேரத்தில் முதலில் கவனத்திற்கு வருவது வீட்டின் சுவர்களாக இருக்கும். ஆம் குழந்தைகள் உள்ள வீடுகளாக இருந்தால் கீழிலிருந்து மேல் வரை ஆங்காங்கே ஓவியங்களும், கிறுக்கல்களும் அதிகமாக இருக்கும். ஹாலில் இருந்தால் வீட்டின் அழகையே பாதிக்கும். இந்த நேரத்தில் விதவிதமான கலர்களில் பெயிண்ட் அடிக்க முடியவில்லை என்றால், வீட்டை அலங்கரிக்க ஸ்டிக்கி நோட்கள் பயன்படுத்துங்கள்.
ஸ்டிக்கி நோட்டுகளைக் கொண்டு ஒரே மாதிரியாக ஒட்டாமல், பல வண்ணங்களை இணைத்து நீங்கள் ஓட்டும் போது வீடுகளை அழகாக காட்டும். அதிக செலவும் ஆகாது. அதே சமயம் வீடுகளின் சுவர்களுக்கு வித்தியாசமாக அழகைக் கொடுக்கும். அதுவும் குழந்தைகள் கையில் கொடுத்து ஒட்டச் சொன்னால் புதிய டிசைன்களைக் கூட கொண்டுவருவார்கள்.
வீடுகளில் அலங்காரத்திற்காக விதவிதமான பொருட்களை எப்படி செய்யலாம்? என்பது குறித்து இன்றைக்கு சோசியல் மீடியாக்களில் பல வீடியோக்கள் வெளிவருகிறது. அதற்குத் தேவையான சில பொருட்களை மட்டும் கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அதை வைத்து விதவிதமான மலர்கள், அலமாரிகளில் வைக்கப்படும் பூங்கொத்துக்கள், மலர் செடிகள் போன்றவற்றைத் தயார் செய்து உபயோகிக்கலாம். பேப்பர்களைக் கொண்டு மலர்கள் செய்து அதை வீட்டு வாயிலின் தோரணமாகப் பயன்படுத்தலாம். இது உங்களது வீட்டின் வாயிலை அழகாக்கும்.
வீடுகளில் உள்ள பழைய பொருட்களைக் கொண்டு மலர்கொத்து செய்தும் உங்களது வீடுகளை அலங்கரிக்கலாம். பழைய பாட்டில்கள், டப்பா போன்றவற்றில் க்ரோசா நூல்களைக் கொண்டு விதவிதமான கலர்களில் பூக்கள் வடிவமைக்கலாம். மலர் தோரணம் போன்று செய்து வாயில் கதவில் தொங்கவிடலாம். மேலும் வீட்டில் உள்ள நாற்காலி, மேசை போன்றவற்றிலும் கூட பழைய துணி அல்லது நூல்களைக் கொண்டு விதவிதமான டிசைன்கள் வடிவமைத்துப் பயன்படுத்தலாம்..
சிறிய அளவிலான மீன் தொட்டிகளை ஹாலில் வைக்கவும். மேலும் வீட்டின் நுழைவு வாயிலுக்கு எதிராக இயற்கைக் காட்சிகள் கொண்ட வால்பேப்பர்கள் ஒட்டடினால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வீட்டை அலங்கரிக்கும் பணியில் ஈடுபடும் போது கொஞ்சம் அனைத்து அறைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத மற்றும் பயன்படுத்த முடியாத பொருட்கள் இருந்தால் அத்தனையும் அப்புறப்படுத்திவிடுங்கள். சுவர்களில் பெயிண்ட் அடிப்பதற்குப் பதிலாக வண்ணமயமான பேப்பர்கள் கடைகளில் விற்பனையாகிறது. குறைந்த செலவில் வாங்கி உங்களது வீடுகளைப் புதியது போன்று உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com