herzindagi
image

வீட்டில் வண்ண மீன்கள் வளர்க்க ஆசையா? பராமரிப்பு குறைவான இந்த மீன்களை பரிசீலிக்கலாம்

உங்கள் வீட்டில் வளர்க்கக் கூடிய சில வகையான வண்ண மீன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம். இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, இவற்றை பராமரிப்பதும் சுலபமாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-12-13, 12:31 IST

வீட்டில் ஒரு மீன் தொட்டி (Aquarium) அமைப்பது சற்று கவனமும், நேரமும் தேவைப்படும் ஒரு செயல் என்றாலும், அது மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய அனுபவமாகும். இவற்றில் என்ன வகையான மீன்களை வாங்கி வளர்க்கலாம் என்ற குழப்பம் புதிதாக மீன் வளர்க்க தொடங்குபவர்களுக்கு இருக்கும். 

வீட்டில் வளர்க்கக் கூடிய வண்ண மீன்கள்:

 

அதன்படி, புதிதாக மீன் வளர்ப்பவர்களுக்கு ஏற்ற சில வகையான மீன்களை இதில் காணலாம். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதுடன், இவற்றை பராமரிப்பது மிகவும் எளிதான காரியம். எனவே, இவை புதிதாக மீன் வளர்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றவையாக அமையும்.

 

மேலும் படிக்க: உங்கள் வீட்டில் சமையல் எரிவாயு சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா? அப்போ இந்த சிம்பிள் டிப்ஸை நோட் பண்ணுங்க; பணத்தை மிச்சப்படுத்தலாம்

 

கப்பி மீன் (Guppy):

 

புதிதாக மீன் வளர்க்க தொடங்குபவர்கள் பெரும்பாலும் கப்பி மீன்களை விரும்புவார்கள். இவை பார்ப்பதற்கு சிறியதாகவும், பிரகாசமான நிறங்களுடனும் காட்சி அளிக்கும். மேலும், இவை எளிதாக இனப்பெருக்கம் செய்யும். இந்த மீன்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. எனவே, இவை எளிதாக வேறு வகையான மீன்களுடன் சேர்ந்து வாழக் கூடியவை.

 

பீட்டா மீன் (Betta Fish):

 

இதனை ஃபைட்டர் மீன் என்றும் அழைப்பார்கள். நீண்ட, பட்டுப் போன்ற துடுப்புகள் மற்றும் வால்கள் இந்த மீனின் தனித்துவமான அம்சங்கள். இவை ஒரு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கின்றன. இந்த வகையான மீன்களை பராமரிப்பது மிகவும் எளிதான வேலை. ஆனால், இந்த வகையான மீன்களை தனியாக மட்டுமே வளர்க்க முடியும். ஏனெனில், இவை ஆக்ரோஷமான தன்மை கொண்டவை.

Beta fish

மேலும் படிக்க: புதிய பாத்திரங்களில் இருந்து ஸ்டிக்கரை அகற்ற முடியவில்லையா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

டெட்ரா (Tetra):

 

டெட்ரா மீன்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால், மிகவும் அமைதியான தன்மை கொண்டவை. புதிதாக மீன் வளர்ப்பவர்களுக்கு இவை சரியானவை. இவற்றின் நீலம் மற்றும் சிவப்பு நிறக் கோடுகள் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். இவை குழுவாக நீந்துவதை பார்க்க பிரமிப்பாக இருக்கும். இந்த மீன்கள் கூட்டமாக வாழும் வகையை சேர்ந்தது.

Tetra fish

 

மோலி மீன் (Mollies):

 

மோலி மீன்களின் நிறம் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக, பல்வேறு வண்ணங்களில் இவை காணப்படும். இவற்றை வளர்க்கும் தொட்டிகளில் சற்று தாவரங்களை கொண்டு அலங்கரித்தால் பார்ப்பதற்கு கூடுதல் அழகாக இருக்கும்.

 

இந்த வகையான மீன்களை உங்கள் வீட்டு தொட்டியில் வளர்ப்பதன் மூலம் வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com