Green Vs Red chilli : பச்சையா, சிவப்பா? எந்த மிளகாய் ஆரோகியத்திற்கு நல்லது தெரியுமா?

உணவிற்கு காரம் சேர்க்க பச்சை அல்லது சிவப்பு மிளகாயை பயன்படுத்துகிறோம். இவ்விரண்டில் எது ஆரோக்கியமானது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவை தொடர்ந்து படியுங்கள்…

green vs red chilly for good health
green vs red chilly for good health

பெரும்பாலும் இந்தியர்களுக்கு காரசாரமான உணவுகள் சாப்பிடுவதில் விருப்பம் அதிகம் இருக்கும். உணவிற்கு காரம் சேர்ப்பதற்கு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகு போன்ற பல பொருட்களை பயன்படுத்துகிறோம். அதிலும் பச்சை மிளகாயில் பல வகைகள் உள்ளன.

குண்டூர் மிளகாய், காந்தாரி மிளகாய், கோலா மிளகாய், காஷ்மீரி மிளகாய் என பல விதமான பச்சை மிளகாய்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் விளைகின்றன. இந்த மிளகாய்கள் சற்று பழுத்து விட்டால் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இவ்விரண்டில், எந்த நிற மிளகாயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்தலாம், எது ஆரோக்கியமானது போன்ற பல பயனுள்ள தகவல்களை இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.

சிவப்பு மிளகாய்

பச்சை மிளகாயை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது அவை சிவப்பாக மாறுகின்றன. பச்சை மிளகாயை வெளியில் வைத்தாலும் சரி அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அவற்றின் நிறம் சிவப்பாக மாறிவிடும். பச்சை மிளகாயில் உள்ள நீர் சத்தும், பச்சை நிறமியையும் குறையும் பொழுது இந்த மாற்றம் ஏற்படுகிறது. இதுபோன்ற நிறமாற்றம் ஏற்படும் போது அதில் உள்ள சில ஊட்டச்சத்துக்களும் நீங்கி விடுகின்றன. இந்த சிவப்பு மிளகாய்கள் கார சுவையை கொடுத்தாலும் அதில் எந்த நீர்ச்சத்தும், ஊட்டச்சத்தும் இருப்பதில்லை.

சிவப்பு மிளகாய் பொடி

green vs red chilly which is healthy

பெரும்பாலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் மிளகாய் பொடிகள் கலப்படம் நிறைந்ததாகவே இருக்கின்றன. இதில் பிரிசர்வேட்டிவ்கள் அல்லது ஃபுட் கலரும் சேர்க்கப்பட்டிருக்கலாம். போதுமானவரை உணவிற்கு கார சுவையை கொடுக்க பச்சை மிளகாயை பயன்படுத்தலாம் அல்லது வீட்டில் அரைத்து சுத்தமான மிளகாய் பொடியை பயன்படுத்தலாம்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் நிறைந்துள்ள அதிக ஊட்டச்சத்துக்களும் நீர்ச்சத்தும் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கின்றன. சிவப்பு மிளகாயுடன் ஒப்பிடுகையில் பச்சை மிளகாயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் ஜீரோ கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிவப்பு மிளகாயின் தீமைகள்

ஒரு சில சமயங்களில் சிவப்பு மிளகாயை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவை சாப்பிடும் பொழுது வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். இந்நிலை தொடர்ந்தால் வயிற்றில் புண் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.

பச்சை மிளகாய் VS சிவப்பு மிளகாய்

green vs red chilly

அதிக நீர்ச்சத்தும், குறைந்த அளவு கலோரியும் உள்ள பச்சை மிளகாயை ஆரோக்கியத்திற்கான சிறந்த தேர்வாகும். இதில் பீட்டா கரோட்டின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. போதுமானவரை சமையலுக்கு பச்சை மிளகாயை பயன்படுத்த முயற்சி செய்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: 30 நாட்களுக்கு இதை செய்து பாருங்கள், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP