சிலர் குளிர்காலத்தில் குளிருக்கு பயந்து தினமும் குளிப்பதை குறைத்து கொள்கிறார்கள். தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தான் இந்த தவறை செய்வார்கள். தினமும் குளிப்பது நாள் முழுவதும் புத்துணர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. வாருங்கள், தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்:காலிபிளவரை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முடியுமா?
தினமும் குளிப்பது முகப்பரு மற்றும் முகப்பரு கட்டி போன்ற பிரச்சனைகளை விரட்டும். இதனால் முகத்தில் அழுக்குகள் சேராது, பாக்டீரியா தொற்றும் பரவாது.
தினமும் குளிப்பது உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இது மன அழுத்தத்தை குறைப்பதுடன் மனதிற்கு அமைதியையும் தருகிறது.
தினமும் குளிப்பது நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இதனால் ஆக்ஸிஜனை உறிஞ்சும் திறன் அதிகமாகும். சுவாச மண்டலமும் மேம்படும்..
குளிர்காலத்தில் நீங்கள் தினமும் குளிப்பதை தவிர்த்தால் இந்த நன்மைகளை பெற முடியாது. எனவே தினமும் குளிப்பதை பழகப்படுத்தி கொண்டு. உடலை ஆரோக்கியமாக. வைத்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:மாதவிடாய் வலியை குறைக்க உதவும் உணவுகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com