சிறுநீர் பாதை தொற்று (UTI) மிகவும் பொதுவான பிரச்சனை. அதிகபடியான பெண்கள் அடிக்கடி இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு காரணம் கெட்ட பாக்டீரியாக்கள் நமது சிறுநீர் பாதையில் நுழையும் போது அது எரியும் உணர்வு, அரிப்பு, அடிவயிற்றில் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் ஒன்றாக உடல் உறவும் இருக்கின்றது. உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணம் என்ன என்று அடிக்கடி மக்கள் கேட்கிறார்கள். அதன் காரணங்கள் என்ன என்பதை ரெயின்போ மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஆலோசகர் டாக்டர் அனாமிகா கவாத்ரா கூறிய தகவலை தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க: சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் எக்கச்சக்க நன்மைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் சிவப்பு பேரிக்காய்
உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் பாதை தொற்று ஏன் ஏற்படுகிறது?
- பிறப்புறுப்பு பகுதியும் சிறுநீர் வெளியேறும் பகுதியும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதால், உடலுறவுக்கு பிறகு சில பெண்களுக்கு கெட்ட பாக்டீரியா தாக்குதல் இருந்தால் அது சிறுநீர் பாதையையும் சென்றடைகிறது. இது சிறுநீர் பாதை தொற்று பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- பல நேரங்களில் மக்கள் சுகாதாரத்தை கவனிக்காமல் இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு ஒரே ஆடைகளை அணிவார்கள். அதனால் உடலுறவின் போது, ஒருவருக்கொருவர் அந்தரங்கப் பகுதியில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரிமாறப்படுகின்றன. மேலும் இது UTI யையும் ஏற்படுத்துகிறது.
- உடலுறவின் போது கீறல்கள் அல்லது வெட்டுக்கள் ஏற்பட்டால் கூட தொற்றுநோயையும் ஏற்படுத்துகிறது.
- பெண்களில் சிறுநீர் பாதை ஆசனவாயுடன் நெருக்கமாக இருப்பாதால் ஈ.கோலை பாக்டீரியாக்கள் செல்வதை எளிதாக்குகிறது.
சிறுநீர் பாதை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகள்
- உடல் ரீதியான உறவுகளுக்கு முன் சுகாதாரத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். முன் மற்றும் பின் இருந்து நெருக்கமான பகுதியை நன்கு சுத்தம் செய்யவும்.
- ஆணுறை பயன்படுத்தவும்.
- தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடலுறவுக்கு பிறகு அதிக தண்ணீர் எடுத்துக்கொள்வது கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது.
- உங்கள் பங்குதாரர் UTI இன் அறிகுறிகளை அனுபவித்தால், மருத்துவரை சென்று சரிசெய்யும் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.
- தனிப்பட்ட சுகாதாரத்திற்காக தினமும் குளிக்கவும், தினமும் உள்ளாடைகளை மாற்றவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credits: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation